ராகுல் சும்மாவே ஆடுவாரு. இப்போ புது கேப்டன் வேற என்னென்ன பண்ண போறாரோ – புலம்பிய இந்திய வீரர்

rahul
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வீரராக இருப்பவர் கே எல் ராகுல், இவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர், இதே மாநிலத்தில் இருந்து தற்போது பல தரமான வீரர்கள் இந்திய அணிக்காக ஆடி வருகிறனர். அவர்களில் ஒருவர்தான் மயாங்க் அகர்வால் .இருவரும் சிறு வயதிலிருந்தே ஒன்றாக கிரிக்கெட் விளையாடியவர்கள். தற்போது இந்திய அணியிலும் ஒன்றாக இடம் பிடித்துள்ளனர்.இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரராக இருக்கிறார் மயாங்க் அகர்வால்.

Rahul1

அதே நேரத்தில் ராகுல் இந்தியாவின் அனைத்து வடிவ அணியிலும் தன் இடத்தை பிடித்துள்ளார். அதே நேரத்தில் இருவரும் ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு ஆடி வருகிறார்கள். இப்படி இருக்க 2020 ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக ராகுல் நியமிக்கப்பட இருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் ராகுல் கேப்டனாவது குறித்து மாயங்க் அகர்வால் சமூக வலை தளத்தில் மூலம் அவரிடமே நேரலையில் பேசிக்கொண்டிருந்தார். இது குறித்து இருவரும் பேசிக் கொண்டிருக்கையில் மயாங்க் அகர்வால் : ‘இந்த ஆண்டு உன்னை கேப்டனாக சந்திக்க காத்திருந்தேன். களத்தில் உனக்கு சும்மாவே கோபம் வரும், இப்போது கேப்டனாக எப்படி நடந்து கொள்வாய் என்பதை பார்க்க ஆர்வமாக இருந்தேன்.

Rahul 1

இதற்கு பதிலளித்த கேஎல் ராகுல், நீ களத்தில் ஏதாவது முட்டாள்தனமாக செய்தால் மட்டுமே, நான் உன்னிடம் கோபப்படுவேன் என்று கூறினார். அப்போது பேசிய மயாங்க் அகர்வால் பழைய ஒரு விஷயத்தைப் பற்றி அவரிடம் கேள்வி எழுப்பினார்.நான் முகமது நபி பந்துவீச்சில் சிக்சர் விளாசிணேன், பின்னர் என்னிடம் நேரடியாக வந்து கடுமையாக திட்டினாய், ஏன் எதற்காக திட்டினாய் என்று கேட்டார்.

- Advertisement -

இதற்கு பதிலளித்த கேஎல் ராகுல் ‘அது முட்டாள்தனமான கிரிக்கெட். நீ சிக்ஸர் அடித்தது எனக்குப் புரிந்தது. ஆனால் அது ரொம்பவும் ரிஸ்க் ஆன ஷாட், நாம் 190 ரன்கள் அடிக்க போவதில்லை, 140 ரன்கள் அடித்தால் நமக்கு வெற்றி. அப்போது வீணாக விக்கெட் இழக்க தயாராக இல்லை. அதனால் சிக்ஸர் அடித்தது மிகவும் தவறு.

Mayank-Agarwal

அடித்து ஆட விரும்பினால் பவுண்டரி அடித்து இருக்க வேண்டும், மேலும், விஜய் சங்கர் சரியான இடத்தில் இருந்தால் ,அதனை கேடச் பிடித்திருப்பார். இதனால் தான் உன்னிடம் கோபம் கொண்டேன் என்று கூறினார் கே எல் ராகுல்.

Advertisement