ஒரே ஒரு ஷாட் தவறானதால் பாஞ்சாப் அணிக்கு ஏற்பட்ட தோல்வி – வருந்தும் ரசிகர்கள்

Agawal
- Advertisement -

ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டி நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த 157 ரன்கள் எடுத்தது அதனைத் தொடர்ந்து 158 ரன்கள் எடுத்தால் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து பஞ்சாப் அணிக்கு துவக்கம் முதலே சரிவு ஏற்பட்டது. 10 ஓவர்களில் 55 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்து திணறிக் கொண்டிருந்தது.

kxip

- Advertisement -

அதன்பின்னர் மயங்க் அகர்வால் மற்றும் கிருஷ்ணபா கவுதம் ஆகிய இருவரும் சேர்ந்து விக்கெட் சரிவை தடுத்து நிறுத்தி மீண்டும் வெற்றியை நோக்கி பஞ்சாப் அணியை அழைத்துச் சென்றார்கள். ஒருவழியாக அதிரடியாக ஆடி மயங் அகர்வால் கடைசி ஓவர் வரை நின்று கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு கொண்டு வந்துவிட்டார்.

இந்த 20 ஆவது ஓவரை மார்க்கஸ் ஸ்டாய்நிஸ் வீசினார். இந்த ஓவரின் மயங்க் அகர்வால் விடவில்லை முதல் 3 பந்துகளில் முதல் பதில் சிக்ஸ், இரண்டாவது பந்தில் 2 ரன்கள், 3 ஆவது பந்தில் 4 ரன்கள் என 12 ரன்கள் அடித்து முதல் 3 பந்தில் 12 ரன்களை விளாசினார். இதனால் கடைசி மூன்று பந்துகளில் ஒரு ரன் எடுத்தால் போதும் என்ற நிலையை உருவாக்கினார்.

agarwal 1

அந்த 20 ஆவது இறுதி ஓவரின் கடைசி 3 பந்துகளை மனம் தளராத மார்க்கஸ் அற்புதமாக பந்துவீசி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை எடுத்து போட்டியை டிரா செய்தார். அதன்பிறகு போட்டி சூப்பர் ஓவரை தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

குறிப்பாக அகர்வாலின் ஒரே ஒரு தவறான போக்கை மாற்றி விட்டு விட்டது. அப்படியே டெல்லியின் பக்கம் திருப்பி விட்டது. 3 பந்துகளில் 1 ரன் தேவைப்பட்ட நிலையில் தூக்கி அடித்து அவுட் ஆனார். இல்லையெனில் பஞ்சாப் எளிதாக வெற்றி அடைத்திருக்கும். ஆனால் எல்லாம் தலைகீழாகி சூப்பர் ஓவரில் எளிதாக காகிசோ ரபாடா டெல்லி அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்து விட்டார்.

Advertisement