இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோகித் சர்மா மற்றும் அகர்வால் ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இந்த போட்டியில் 215 ரன்கள் சேர்த்தது மூலம் தனது முதல் சதத்தை இரட்டை சதமாக மாற்றிய நான்காவது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அத்துடன் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் தனி நபராக அதிக ரன் அதிகபட்ச ஸ்கோர் அடித்த வீரர் என்ற பெருமையை இந்த 215 ரன்கள் மூலம் அகர்வால் பெற்றுள்ளார்.
இதற்கு முன்னர் இந்த ஆண்டு ஸ்டீவ் ஸ்மித் ஆஷஸ் தொடரின் போது அடித்த 211 ரன்கள் தான் இந்த வருடத்தில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆக இருந்தது. இதனை தற்போது அகர்வால் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆண்டு டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
இதற்கு முன்பாக இந்த ஆண்டு ஹோல்டர், வில்லியம்சன். ஸ்மித் மற்றும் ராஸ் டெய்லர் ஆகியோர் இந்த ஆண்டு இரட்டை சதமடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.