கே.எல் ராகுலுக்கு பதிலாக பஞ்சாப் அணிக்கு நியமிக்கப்பட்ட புதிய கேப்டன் யார் தெரியுமா ? – விவரம் இதோ

rahul

ஐபிஎல் தொடரின் முக்கிய அணிகளில் ஒன்றாக கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் திகழ்ந்து வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் மூன்று வெற்றிகள் மற்றும் நான்கு தோல்விகள் என 6 புள்ளிகளுடன் தற்போதைக்கு ஐந்தாவது இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணி. இன்னும் சில போட்டிகளில் வெற்றிபெற்று பிளே ஆப் வாய்ப்பை எட்டி பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Rahul

இந்நிலையில் பஞ்சாப் அணி இன்று டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்க இருக்கிறது. இந்நிலையில் பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் நேற்று இரவு கடுமையான வயிற்று வலி காரணமாக பரிசோதிக்கப்பட்ட நிலையில் அப்பன்டிக்ஸ் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்றைய டெல்லி டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமின்றி அவருக்கு ஆபரேஷன் செய்ய உள்ளதால் மேலும் சில போட்டிகளிலும் அவர் தவறவிடுவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது பஞ்சாப் அணிக்கு புதிய கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்த்த வேலைகள் பஞ்சாப் அணியின் புதிய கேப்டனாக துவக்க வீரரான மயங்க் அகர்வால் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Agarwal

அணியில் அனுபவ வீரராக கெயில் இருந்தாலும் அவரைத் தாண்டி இளம் வீரர் ஒருவரை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற காரணத்தினால் மயங்க் அகர்வால்க்கு கேப்டன் பொறுப்பு வழங்கப் பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இப்போதைக்கு இன்னும் சில போட்டிகளுக்கு தொடர்ந்து அகர்வால் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக செயல்படுவார் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -