லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 70-வது லீக் போட்டியில் விளையாடிய ஜிதேஷ் சர்மா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 228 ரன்கள் என்கிற பிரம்மாண்ட இலக்கினை வெறும் 18.4 ஓவர்களிலேயே சேசிங் செய்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்திற்கும் முன்னேறி குவாலிஃபயர் 1 போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
ஜிதேஷ் சர்மாவின் ஆட்டம் பிரமாதமாக இருந்தது : மாயங்க் அகர்வால்
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த முக்கியமான ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடி லக்னோ அணியானது ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 227 ரன்கள் என்கிற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியது.
லக்னோ அணி சார்பாக ரிஷப் பண்ட் 118 ரன்களையும், மிட்சல் மார்ஷ் 67 ரன்களையும் குவித்தனர். பின்னர் 228 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 230 ரன்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது விராட் கோலி 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தாலும், கேப்டன் ஜிதேஷ் சர்மா 33 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர் என 85 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அதிலும் குறிப்பாக மாயங்க் அகர்வாலுடன் இணைந்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்த ஜோடி வெற்றியை பெற்று தந்திருந்தது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து ஜிதேஷ் சர்மாவுடன் இணைந்து விளையாடிய மாயங்க் அகர்வால் அவர்களது இந்த பார்ட்னர்ஷிப் குறித்து சில கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்திருந்தார். அந்த வகையில் மாயங்க் அகர்வால் கூறியதாவது : நான் ஜிதேஷ் சர்மாவிடம் குறைவாகவே பேசினேன். ஏனெனில் அவருக்கு நான் ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்தால் ஜிதேஷ் சர்மா அடிக்கப்போகிறார் என்பது எனக்கு புரிந்தது. அதனால் நான் சிங்கிள் மட்டும் எடுத்து கொடுத்தேன். மற்றவை எல்லாம் அவரே பார்த்துக் கொண்டார். இன்றைய போட்டியில் அவர் விளையாடிய விதம் உண்மையிலேயே மிகச் சிறப்பாக இருந்தது. சரியான நேரத்தில் அவர் ரிஸ்க் எடுத்து ரன்களை குவித்தார்.
இதையும் படிங்க : இந்த சீசன் முழுசா நாங்க கஷ்டப்பட இதுவே காரணம்.. கடைசி போட்டியில் அடைத்த தோல்விக்கு பின் – ரிஷப் பண்ட் பேட்டி
அதிலும் குறிப்பாக ஃபாஸ்ட் பவுலர்களை அவர் அட்டாக் செய்து விளையாடியதை பார்ப்பதற்கு அருமையாக இருந்தது. எங்களது பார்ட்னர்ஷிப் சிறிது வளர ஆரம்பித்ததுமே எனக்கு இந்த போட்டியில் வெற்றிபெறும் நம்பிக்கை வந்து விட்டது. கேப்டனாக இந்த போட்டியில் முன் நின்று அவர் வெற்றியை தேடித்தந்துள்ளார் என மாயங்க் அகர்வால் கூறியது குறிப்பிடத்தக்கது.



