ஐ.பி.எல் வேணுன்னா அப்படி நடத்தலாம். ஆனால் உலகக்கோப்பை இவங்க இல்லாம நடத்தக்கூடாது – கொந்தளித்த மேக்ஸ்வெல்

Maxwell
- Advertisement -

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு நாடுகளும் ஊரடங்கு விதிமுறைகளால் முடங்கியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வருகின்றன. குறிப்பாக அதிக ரசிகர்கள் பார்வையாளர்களை கொண்ட கால்பந்து கிரிக்கெட் போன்ற போட்டிகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கோலாகலமாக துவங்க இருந்த ஐபிஎல் தொடர் மார்ச் 29ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 15ம் தேதி தள்ளிவைக்கப்பட்டது.

Cup

- Advertisement -

ஆனால் தற்போது மீண்டும் இந்தியாவில் நிலைமை சரியில்லாத காரணத்தினால் மே 3 ஆம் தேதி வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி உலகின் மிகப்பெரிய விளையாட்டு தொடரான ஒலிம்பிக் போட்டிகளும் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மீண்டும் இந்த நிலை சாதாரணமாக மாற சில மாதங்கள் பிடிக்கும் என்றும் அதனால் மீண்டும் விளையாட்டுப்போட்டிகள் எப்போது துவங்கும் என்றும் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் கிரிக்கெட் ரசிகர்களை பொருத்தவரை எப்பொழுது மீண்டும் கிரிக்கெட் நடைபெறும் என ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். வீரர்களுக்கும் அதே நிலைமைதான் பல மாதங்களாக தொடர்ச்சியாக விளையாடிய வீரர்கள் தற்போது கடந்த பல நாட்களாக வீட்டில் முடங்கி உள்ளனர். வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் இந்திய வீரர்களை வைத்து ஐபிஎல் நடத்தலாம் என்ற கருத்தும் தற்போது பலிக்காமல் போய்விட்டது.

Maxwell

ஏனெனில் இந்தியாவில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்திய வீரர்களை வைத்து ஐபிஎல் நடத்துவது சந்தேகம் என்பது உறுதியாகிவிட்டது. இதனால் அடுத்து அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் டி20 உலக கோப்பை தொடரில் மட்டுமே ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது அந்த தொடரும் தள்ளிவைக்கப்பட்ட வாய்ப்பு உள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

இதற்கிடையில் ரசிகர்கள் இல்லாமல் கூடிய மைதானத்திற்குள் போட்டியை நடத்தலாம் என்று சில வீரர்கள் விருப்பம் தெரிவித்து இருந்தனர். ஆனால் ரசிகர்கள் இல்லாமல் டி20 உலக கோப்பை நடைபெற்றால் அது நன்றாக இருக்காது என்று ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரரான மேக்ஸ்வெல் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டியை வேண்டுமென்றால் நடத்தலாம் .ஆனால் ரசிகர்கள் இல்லாமல் டி20 உலக கோப்பை நடத்த முடியாது.

glenn-maxwell

அப்படி நடந்தால் அதை என்னால் பார்க்க முடியாது ஏனெனில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் என்பது உலக ரசிகர்களின் வரவேற்பை பெற்ற மிகப்பெரிய தொடர் அந்த தொடர் நடைபெறும் போது ரசிகர்கள் மைதானத்தில் இல்லாததை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. வருங்காலத்தில் இப்படி நடக்கும் என்று என்னால் யோசித்து கூட பார்க்க முடியாது. தற்போது மக்களின் நலத்தில் அக்கறை செலுத்துவது மட்டுமே முக்கியம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement