மன அழுத்தம் இருந்த நேரத்தில் நான் யோசித்தவை ரொம்ப மோசமானது – தனது கஷ்டம் குறித்து பேசிய மேக்ஸ்வெல்

Maxwell

ஆஸ்திரேலிய அணி நட்சத்திர ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் போது மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளானதாக தெரிவித்து அதன்பிறகு சில மாதங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்டார். இதுகுறித்து தற்போது பல திடுக்கிடும் விஷயங்களை வெளியே கூறியுள்ளார்.

glenn-maxwell

தான் கஷ்டமான காலகட்டத்தில் எவ்வளவு பிரச்சினைகளை சந்தித்தேன், எவ்வளவு மன நெருக்கடியை சந்தித்து, அதிலிருந்து மீண்டுவர யாரெல்லாம் உதவினார்கள் என்னவெல்லாம் செய்தேன் என்பது குறித்து பேசியுள்ளார். 36 வயதாகும் மேக்ஸ்வெல் கடந்த சில வருடங்களாக சரியாக ஆட முடியாமல் தவித்து வந்தார். இருப்பினும் 019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் விளையாடினார்.

உலக கோப்பை தொடரில் விளையாடி வெல்ல வேண்டாம் என்று நினைத்துள்ளார். அது நடக்காத பட்சத்தில் தன் கையை உடைத்துல் கொண்டுவிட்டால் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் எனவும் நினைத்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ ஒன்றில் அவர் கூறியதாவது : 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் போது நான் மிகவும் மன நெருக்கடிக்கு உள்ளானேன். இதிலிருந்து வெளியே வர எனக்கு கால அவகாசம் தேவைப்பட்டது.

Maxwell

இந்த கால அவகாசத்தை எடுப்பதற்காக கையை கூட உடைத்துக் கொள்ளலாமா என்றும் யோசித்தேன். அவ்வளவு அழுத்தத்திலும் நான் வாழ்ந்து வந்தேன். அந்த நேரத்தில் தான் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய தொடர்களில் கலந்து கொள்ளாமல் ப்ரேக் எடுத்துக்கொண்டேன்.
மேலும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடந்த பயிற்சி போட்டியின் போது நானும் ஷான் மார்சும் மோதிக் கொண்டோம். ஆனால், நான் ஏன் அவ்வாறு செய்தேன் என்று தெரியவில்லை.

- Advertisement -

அப்போது இருவரும் மருத்துவமனைக்குச் சென்று ஆலோசனை பெற்றோம். இதனை வைத்து நான் அணியில் இருந்து விலகினேன். எனக்கே என்மீது கோபமாக இருந்தது மற்றவர்கள் மீதும் கோவமாக இருந்தது. உலககோப்பையில் சரியாக ஆட முடியவில்லை என்று மிகவும் மன வருத்தத்தில் இருந்தேன். இந்த கட்டத்தில்தான் வினி இராமன் எனக்கு கை கொடுத்தார். அவர்தான் எனது மனநல பிரச்சனையிலிருந்து வெளிவர உதவினார்.

Maxwell

அவர் எனது விளையாட்டையும் என்னையும் பல ஆண்டுகளாக கூர்ந்து கவனித்து வந்தார். என்னை அதிலிருந்து விடுபட வைக்க சரியாக திட்டம் தீட்டி நிறைய வேலைகளை செய்தார். நான் நானாக இல்லை என்பது எனக்கு சுட்டிக்காட்டினார். என்னை வீட்டிலேயே வைத்து நன்றாக பார்த்துக் கொண்டார். நிறைய வேறு வேலைகள் செய்ய வைத்தார். பின்னர் மெதுவாக அவருடன் சேர்ந்து சகஜ நிலைக்குத் திரும்பினேன் எனக் கூறினார் மேக்ஸ்வெல்.

- Advertisement -