டி20 உலகக்கோப்பையை வெல்ல பிரகாசமான வாய்ப்புள்ள அணி இதுதான் – மேக்ஸ்வெல் ஓபன்டாக்

Maxwell

இந்தியாவில் நடைபெற இருந்த உலக கோப்பை டி20 தொடரானது இங்கு பரவி வந்த கொரோனா அச்சம் காரணமாக நடத்த முடியாத காரணத்தினால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. அதன்படி வரும் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 14ஆம் தேதி வரை நடைபெறும். இந்த தொடரில் 12 அணிகள் பங்கேற்கின்றன. இதில் நேரடியாக 8 அணிகள் தகுதி பெற்ற வேளையில் மீதமுள்ள நான்கு அணிகள் தகுதி சுற்றின் அடிப்படையில் இந்த தொடரில் பங்கேற்கும்.

cup

அதன்படி இந்த தொடர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் வேளையில் இந்த டி20 உலக கோப்பை தொடரை வெல்ல போகும் அணி எது ? என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்கள், பிரபலங்கள், கிரிக்கெட் நிபுணர்கள் என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான மேக்ஸ்வெல் இந்த டி20 உலகக் கோப்பை தொடர் குறித்து பேசுகையில் : இந்த உலகக் கோப்பை டி20 தொடரை வெல்லும் வாய்ப்பு எங்கள் அணிக்கு பிரகாசமாக இருக்கிறது. ஆஸ்திரேலியா அணியில் இருக்கும் வீரர்கள் அனைவரும் மேட்ச் வின்னர்கள் தான். போட்டியின் எந்த நேரத்திலும் முடிவை மாற்றக்கூடிய வீரர்கள் எங்களிடம் உள்ளனர்.

indvsaus

அதனால் நிச்சயம் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த மற்ற அணிகள் கடுமையாக போராடியாக வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ஐபிஎல் தொடர் தற்போது அமீரகத்தில் நடக்க இருப்பதால் நாங்கள் உலக கோப்பை தொடருக்கு தயாராவதற்கு இந்த தொடர் எங்களுக்கு வாய்ப்பாக அமையும். அதே போன்று இங்குள்ள தட்பவெப்ப நிலை, ஆடுகளங்களில் தன்மை ஆகியவை ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு பழகிவிடும்.

- Advertisement -

indvsaus

எனவே இந்த டி20 உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி பலம் வாய்ந்த அணியாக திகழும் என்றும் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : நான் இந்த கருத்தினை கூறுவதால் மற்ற அணிகளை குறைத்து மதிப்பிடவில்லை. இருப்பினும் நாங்கள் இந்த தொடரில் சிறப்பாக செயல்படுவோம் என்று நம்பிக்கை இருப்பதாக மேக்ஸ்வெல் தனது கருத்தை பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement