தோற்ற வெறியில் பாகிஸ்தான் வீரருக்கு கை குலுக்காமல் போன ஆஸ்திரேலிய வீரர்..! – வைரலாகும் வீடியோ

malik
Advertisement

ஆஸ்திரேலிய, பாகிஸ்தான், ஜிம்பாபே அணிகள் மோதும் முத்தரப்பு டி20 போட்டிகள் நடைபெற்று வந்தது. இந்த தொடரின் இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி , ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இந்த போட்டியின் முடிவில் பாகிஸ்தான் வீரர் ஷர்ஃராஸ் அஹ்மத்தை ஆஸ்திரேலியா அணியின் கேலன் மேக்ஸ்வெல் அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டுள்ளார்.
maxwel
பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இந்த தொடரின் இருந்து போட்டி ஹராரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் 183 ரன்களை எடுத்து. பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.2 ஓவர்களில் இலக்கை அடைந்து வெற்றி பெற்று முத்தரப்பு தொடர் கோப்பையை வென்றது.

இந்த போட்டி முடிந்த பின்னர் இரு அணி வீரர்களும் ஒருவருக்கு ஒருவர் கை குலுக்கி நன்றி தெரிவித்தனர். அப்போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷர்ஃராஸ் அஹ்மத், ஆஸ்திரேலிய அணியின் கேலன் மேக்ஸ்வெலுக்கு கை குலுக்க தனது கையை நீட்டினார். ஆனால், கேலன் மேக்ஸ்வெல் அவரை கண்டு கொள்ளாமல் சென்று விட்டார்.

- Advertisement -

கேலன் மேக்ஸ்வெல் பாகிஸ்தான் வீரர் ஷர்ஃராஸ் அஹ்மத்தை அவமதிக்கும் நோக்கத்தில் தான் ஆஸ்திரேலியா அணியின் கேலன் மேக்ஸ்வெல் வேண்டுமென்றே அவருக்கு கை குலுக்காமல் சென்று விட்டார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் கேலன் மேக்ஸ்வெல்லை சாடி வருகின்றாரனார். தற்போது அந்த விடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement