கோடிக்கணக்கில் எடுத்த இவங்க 2 பேரும் வேணாம். பஞ்சாப் அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட 2 வீரர்கள் – விவரம் இதோ

KXIP
- Advertisement -

2021ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் 14வது ஐபிஎல் சீசன் வருகின்ற ஏப்ரல், மே மாதத்தில் நடைபெறும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கான பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 14 வது ஐபிஎல் சீசனின் ஏலத்தை பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. எனவே இதற்கு முன்னர் அனைத்து அணிகளும் தங்கள் அணியில் இருந்து வெளியேற்றப்படும் மற்றும் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை ஜனவரி 20ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

ipl trophy

- Advertisement -

அதன்படி அனைத்து அணிகளும் தங்கள் அணியின் ஒப்பந்தம் முடிந்து வெளியேறும் வீரர்களின் பட்டியலையும், மோசமாக விளையாடியதால் வெளியேற்றப்படும் வீரர்களையும் அறிவித்திருக்கிறது. இவ்வாறு வெளியேற்றப்பட்ட வீரர்கள் அனைவரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் ஏலத்தின் மூலம் மற்ற அணியில் தேர்வு செய்யப்படுவார்கள்.

அந்தவகையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் தங்களது அணையிலிருந்து வெளியேற்றப்படும் மற்றும் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இதில் பஞ்சாப் அணிக்காக நீண்டகாலமாக விளையாடி வந்த ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல்லை தற்போது வெளியேற்றி இருக்கிறது அந்த அணி. ஏனென்றால் கடந்த சீசனில் மேக்ஸ்வெல் 11 இன்னிங்ஸில் விளையாடி வெறும் 108 ரன்கள் மட்டும் அடித்து 15.42 சராசரியை பெற்று இருக்கிறார்.

Maxwell

கடந்த ஆண்டு 10.5 கோடி செலவில் பஞ்சாப் அணியில் தேர்வு செய்யப்பட்ட கிளென் மேக்ஸ்வெல் அவரது மோசமான ஆட்டம் காரணமாக இந்த ஆண்டு வெளியேற்றப்பட்டு இருக்கிறார். இவரை தொடர்ந்து கடந்த ஆண்டு 8.5 கோடி செலவில் பஞ்சாப் அணியில் தேர்வு செய்யப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஷெல்டான் காட்ரெலையும் அதிரடியாக வெளியேற்றி இருக்கிறது.

Cottrell

கடந்த ஐபிஎல் தொடரில் 6 இன்னிங்சில் விளையாடிய காட்ரெல் 176 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தி 29.33 சராசரியை பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரை தொடர்ந்து முஜீப் ரஹ்மான், ஹார்டஸ் வில்ஜோன், ஜேம்ஸ் நீஷாம், கிருஷ்ணப்ப கவுதம், கருண் நாயர், ஜெகதீஷா சுசித், தேஜிந்தர் சிங் தில்லான் ஆகியோரையும் பஞ்சாப் அணி வெளியேற்றி இருக்கிறது.

Advertisement