நாங்க பண்ண இந்த தப்பு தான் கடைசி போட்டியிலும் தோக்க காரணம் – ஆஸ்திரேலிய கேப்டன் மேத்யூ வேட் வருத்தம்

Wade
- Advertisement -

மேத்யூ வேட் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி முடித்துள்ளது. டிசம்பர் 3-ஆம் தேதி பெங்களூரு மைதானத்தில் நடைபெற்று முடிந்த இந்த ஐந்தாவது டி20 போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா அணியானது இந்த தொடரினை இந்திய அணியிடம் நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் இழந்துள்ளது.

உலக கோப்பையை வென்ற கையோடு அடுத்ததாக ஆஸ்திரேலிய அணி பங்கேற்ற இந்த தொடர் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்திருந்தது. இவ்வேளையில் இந்திய அணி இந்த தொடரை கைப்பற்றி உலகக் கோப்பை தொடரில் அடைந்த தோல்விக்கு ஆறுதல் அளித்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் நடைபெற்று முடிந்த ஐந்தாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் குவித்தது. பின்னர் 161 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் மட்டுமே குவித்ததால் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேத்யூ வேட் கூறுகையில் : இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாகவே பந்துவீசி இருந்தோம். அதேபோன்று இந்த இலக்கு எட்டக்கூடிய ஒன்றுதான் இருந்தாலும் கடைசி 5-6 ஓவர்களில் நாங்கள் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்த தவறிவிட்டோம். அதனாலே இந்த தோல்வியை சந்தித்துள்ளோம்.

- Advertisement -

என்னுடைய ரோல் பின்வரிசையில் களமிறங்கி போட்டியை முடித்து கொடுப்பதுதான். டி20 உலக கோப்பையிலும் அதே பணியை செய்ய ஆவலோடு காத்திருக்கிறேன். இன்றைய போட்டியை வெற்றிகரமாக ஆட்டத்தை முடித்துக் கொடுக்க முடியவில்லை என்றாலும் இனிவரும் போட்டிகளில் அதனை செய்ய முயற்சிப்பேன்.

இதையும் படிங்க : இந்த தொடர்ல நாங்க விளையாட விரும்புனது இப்படி மட்டும் தான்.. தொடரின் வெற்றிக்கு பிறகு – சூரியகுமார் யாதவ் பேட்டி

இந்த தொடரினை நாங்கள் மூன்றுக்கு இரண்டு (3-2) என்ற கணக்கில் முடித்திருக்க வேண்டும் ஆனால் இறுதியில் முடிவு மாறியுள்ளது. இருந்தாலும் நாங்கள் இந்த தொடர் முழுவதுமே நல்ல கிரிக்கெட்டை விளையாடியதாக உணர்கிறோம். அதோடு இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்திருந்த புதுமுக வீரர்கள் பலரும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தனர் என மேத்யூ வேட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement