இதோட என் பயணம் முடிந்து விட்டது என்பது புரிந்துவிட்டது.. ஓய்வை அறிவித்த – ஆஸி வீரர் மேத்யூ வேட்

Wade
- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான மேத்யூ வேட் கடந்த 2011-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை அந்த அணிக்காக 36 டெஸ்ட் போட்டிகள், 97 ஒருநாள் போட்டிகள் மற்றும் 92 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டிற்கு பிறகு டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளில் இடம்பெறாமல் இருந்து வந்த அவர் தொடர்ச்சியாக டி20 போட்டிகளில் இடம் பிடித்து விளையாடி வந்தார்.

ஓய்வை அறிவித்தார் ஆஸி வீரர் மேத்யூ வேட் :

அதேபோன்று ஐ.பி.எல் தொடரிலும் அவர் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார். இருப்பினும் சற்று வயது முதிர்ந்த வீரராக பார்க்கப்படும் அவருக்கு ஆஸ்திரேலிய அணியில் நிலையான இடம் கிடைக்காமல் இருந்து வந்தது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது 37 வயதாகும் மேத்யூ வேட் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடைசியாக அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்-இல் இந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்ற அவர் அதன் பின்னர் ஆஸ்திரேலிய அணியில் விளையாடாமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தனது ஓய்வு முடிவு குறித்து பேசிய மேத்யூ வேட் கூறுகையில் : கடந்த டி20 உலக கோப்பையும் தொடரின் முடிவின் போது நான் சர்வதேச போட்டியில் விளையாடுவதற்கான நாட்கள் முடிந்து விட்டதாக முழுமையாக அறிந்தேன். என்னுடைய ஓய்வு குறித்து பயிற்சியாளர் இடமும் நிர்வாகத்துடன் கடந்த ஆறு மாதங்களாக ஆலோசனை நடத்தி வந்தேன்.

- Advertisement -

பயிற்சியாளரின் பார்வையில் நான் தற்போது வரை வாய்ப்பு பெற்றதில் மகிழ்ச்சி. ஆனால் இனியும் என்னால் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட முடியாது என்று நினைக்கிறேன். இருந்தாலும் பிக் பாஸ் உள்ளிட்ட உலகெங்கிலும் நடக்கும் சில டி20 லீக் தொடர்களில் நிச்சயம் பங்கேற்று விளையாடுவேன் என்று மேத்யூ வேட் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான அணியிலும் கேன் வில்லியம்சன் விளையாட மாட்டாராம்? – காரணம் இதோ

அதேபோன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வை அறிவித்தாலும் இனிவரும் எதிர்காலத்தில் ஆஸ்திரேலியா அணியின் பயிற்சி குழுவில் தான் இணைந்து பணியாற்ற விரும்புவதாகும் அவர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement