ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. அந்த தோல்விக்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தது முக்கிய காரணமானது.
குறிப்பாக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி கடந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்தங்களில் தொடர்ச்சியாக தம்முடைய விக்கெட்டுகளை இழந்தார். அதனால் இந்தியாவின் தோல்விக்கு காரணமான அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வையும் அறிவித்தார். அப்படிப்பட்ட அவர் இத்தொடரின் முதல் போட்டியிலும் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்தில் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் டக் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்.
வலையில் விழவைப்போம்
இதை அடுத்து அக்டோபர் 23ஆம் தேதி 2வது போட்டி அடிலெய்ட் மைதானத்தில் நடைபெறுகிறது. அந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கு விராட் கோலி, ரோஹித் சர்மா ஆரம்பத்திலேயே பெரிய ரன்கள் குவிப்பது அவசியமாகிறது. அப்போட்டியில் விராட் கோலி தமக்கு பிடித்த அடிலெய்ட் மைதானத்தில் பெரிய ரன்கள் குவிப்பாரா? என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இரண்டாவது போட்டியிலும் விராட் கோலியை அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்து வலையில் எளிதாக வீழ்த்துவோம் என்று ஆஸ்திரேலியா வீரர் மேத்தியூ ஷார்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நான் வேகப்பந்து வீச்சாளர்களின் மீட்டிங்கில் பங்கெடுத்துக் கொள்வதில்லை. ஆனால் விராட் கோலி சமீப காலங்களில் அந்த வழியில் தொடர்ந்து அவுட்டாவது போல் தெரிகிறது”
விராட் திருப்பி அடிப்பாரா:
“அதனால் ஹேசல்வுட், ஸ்டார்க் ஆகியோர் அவருக்கு எதிராக அந்த பந்துகளை நிறைய வீசியுள்ளார்கள். எனவே அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். பெர்த் மைதானத்தில் ஸ்விங், வேகம் போன்ற அனைத்துக்கும் சாதகமான சூழ்நிலை நிலவியது. எனவே அவர்கள் மீண்டும் அதை விராட் கோலிக்கு எதிராக செய்வார்கள் என்று நான் உறுதியாக சொல்வேன்”
இதையும் படிங்க: 235/8 டூ 404.. 38 பந்தில் 50.. ரபாடா 2வது உலக சாதனை.. பாகிஸ்தான் நொறுக்கிய தெ.ஆ டெயில் எண்டர்ஸ்
“ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். எனவே விராட் கோலி போன்றவருக்கு ஆஸ்திரேலியாவில் விளையாடுவது நன்றாக இருக்கும். அவரைப் போன்ற ஜாம்பவான் வீரருடன் களத்தைப் பகிர்ந்து கொள்வது சிறப்பாக இருக்கும். இத்தொடரின் ஏதோ ஒரு பகுதியில் விராட் கோலியிடம் பேசும் வாய்ப்பு எனக்கு கண்டிப்பாக கிடைக்கும்” என்று கூறினார்.



