நெஞ்சில் அடிவாங்கி அடுத்த நொடியே மைதானத்தில் சுருண்டு விழுந்த ஆஸி வீரர் – வைரலாகும் வீடியோ

Short
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வரும் முதல்தர கிரிக்கெட் தொடரான ஷீல்டு கிரிக்கெட் தொடரின் ஒரு போட்டியில் விக்டோரியா மற்றும் குயின்ஸ்லேண்ட் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் விக்டோரியா அணி முதலில் விளையாடி 330 ரன்கள் அடித்தது. அதன் பிறகு முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால் 146 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விக்டோரியா அணி விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் குயின்ஸ்லாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் பில்லி ஸ்டேன்லேக் எனும் பந்துவீச்சாளர் வீசிய பந்தில் மேத்யூஸ் ஷார்ட் நெஞ்சில் படுமோசமாக ஒரு அடி வாங்கினார். பந்தை சரியாக கணிக்கத் தவறிய ஷார்ட் நெஞ்சில் அடி வாங்கிய உடனே களத்தில் சுருண்டு விழுந்தார் உடனே அவரை பரிசோதிக்க பிசியோதெரபிஸ்ட் மைதானத்திற்கு விரைந்து வந்தனர்.

அதிர்ஷ்டவசமாக காயமோ பயப்படும்படியாக எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் அவர் தப்பினார் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வீடியோ அதிகஅளவு பகிரப்படும் வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement