ஐபிஎல் 2023 : அந்த 2 பேரால் சிஎஸ்கே கத்தி மேலே நடக்க போறாங்க – சீனியர் வீரர்களை எச்சரிக்கும் ஹெய்டன்

Hayden
- Advertisement -

இந்தியாவின் நம்பர் ஒன் விளையாட்டு தொடரான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் வரும் மார்ச் 31 முதல் கோலாகலமாக துவங்குகிறது. வழக்கம் போலவே இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பல நட்சத்திர வீரர்கள் பங்கேற்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள இத்தொடரின் கோப்பையை வெல்வதற்கு களமிறங்கும் 10 அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாட உள்ளது. ஏற்கனவே 4 கோப்பைகளை வென்று பெரும்பாலான தொடர்களில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணியாக திகழும் சென்னை கடந்த வருடம் புள்ளி பட்டியலில் 9வது இடத்தை பிடித்து 2020க்குப்பின் நாக் அவுட் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை நழுவ விட்டது.

CSK Ms DHoni

- Advertisement -

அதனால் இந்த வருடம் மிகச் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி 2021 போல் கம்பேக் கொடுத்து 5வது கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் களமிறங்கும் சென்னை 2019க்குப்பின் தனது சொந்த ஊரான சேப்பாக்கம் மைதானத்தில் தமிழக ரசிகர்களின் ஆதரவுடன் விளையாட உள்ளது. அந்த அணிக்கு கடந்த முறை கேப்டன்ஷிப் பதவியால் தடுமாறி காயமடைந்து வெளியேறிய ரவீந்திர ஜடேஜா இம்முறை குணமடைந்து நல்ல ஃபார்முக்கு திரும்பியுள்ள நிலையில் உலகின் நம்பர் ஒன் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் முக்கிய பலத்தை சேர்க்கிறார்.

கத்தி மேல:
அவர்களுடன் ருதுராஜ் கைக்வாட் போன்ற சில இளம் வீரர்கள் விளையாடினாலும் கேப்டன் எம்எஸ் தோனி உட்பட பெரும்பாலான வீரர்கள் 30 – 35 வயதை கடந்தவர்களாகவே இருக்கிறார்கள். அதன் காரணமாக டாடி ஆர்மி என்று கிண்டல்களுக்கு உள்ளான சென்னை 2018இல் 3வது கோப்பையும் 2021இல் 4வது கோப்பையும் வென்று அவை அனைத்தையும் பொய்யாக்கி செயல்பாடுகளால் பதிலடி கொடுத்தது. ஆனால் தோனி, ஷேன் வாட்சன், ராயுடு போன்ற அதே வயதுடைய மூத்த வீரர்கள் தான் 2020 சீசனில் முதல் முறையாக பிளே ஆப் சுற்று வாய்ப்பை சென்னை இழப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தனர்.

இந்நிலையில் 40 வயதை கடந்துள்ள கேப்டன் தோனியும் 37 வயதை கடந்துள்ள ராயுடுவும் இருப்பது இந்த சீசனில் சென்னை அணிக்கு கத்தி மேல் நடப்பது போன்ற நிலைமை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் வீரர் மேத்தியூ ஹெய்டன் தெரிவித்துள்ளார். அதாவது அதிகப்படியான அனுபவத்தால் அவர்களால் வெற்றியை பெற்றுக் கொடுக்க முடியும் என்று தெரிவிக்கும் அவர் அதிகப்படியான வயதால் டி20 கிரிக்கெட்டுக்கு ஈடு கொடுக்க முடியாமல் சோடை போகவும் வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார். எனவே இந்த சீசனில் சென்னை கோப்பை வெல்வதற்கு அந்த இருவரும் சிறப்பாக செயல்படுவது அவசியம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்ருமாறு.

- Advertisement -

Hayden

“டாடி ஆர்மி என்ற பெயரை ஏற்கனவே வாங்கிய அவர்கள் மீண்டும் வாங்கும் நிலையில் இருக்கிறார்கள். ஏனெனில் இந்த வருடமும் கிட்டத்தட்ட அதே மாதிரியான சென்னை அணி தான் விளையாட உள்ளது. குறிப்பாக எம்எஸ் தோனி மற்றும் அம்பத்தி ராயுடு போன்ற அதிக வயதுடையவர்கள் சென்னை அணிக்கு முக்கிய வீரர்களாக மட்டுமல்லாமல் அணியை பொறுப்புடன் வழி நடத்தும் தலைவர்களாகவும் இருக்க வேண்டும். எனவே இந்த 2 துருப்புச் சீட்டு வீரர்களிடம் வயது என்பது சாதகமாக இருக்கிறது. ஆனால் அவர்களின் அந்த வயதால் கிடைத்த அனுபவத்தால் சென்னைக்கு வெற்றி கிடைக்குமா அல்லது அதே வயது காரணத்தால் சென்னை அணிக்கு வீழ்ச்சி ஏற்படுமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்” என கூறினார்.

இதையும் படிங்க: இந்த ஐ.பி.எல் தொடரில் அவரு கண்டிப்பா ஜொலிப்பாரு. இனிமே தான் அவரோட ஆட்டமே இருக்கு – ரிக்கி பாண்டிங் கருத்து

அவர் கூறுவது போல 2019க்குப்பின் தோனி, ராயுடு ஆகிய இருவருமே வயதால் பழைய பன்னீர்செல்வமாக செயல்பட முடியாமல் தவித்தார்கள். குறிப்பாக சரவெடியாக செயல்படக்கூடிய தோனி 2020, 2021 சீசன்களில் ஒரு அரை சதம் கூட அடிக்க முடியாமல் திண்டாடினார். இருப்பினும் 2022 சீசனில் மும்பைக்கு எதிராக ஃபினிஷிங் செய்தது உட்பட ஓரளவு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் தன்னுடைய கடைசி சீசனாக கருதப்படும் இந்த வருடம் சென்னை ரசிகர்களின் ஆதரவுடன் வயதை நம்பராக்கி அற்புதமாக செயல்பட்டு வெற்றியுடன் விடைபெறுவற்கு முயற்சிப்பார் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement