WTC Final : ரிஷப் பண்ட் இடத்துல இவர் விளையாடுனா சரியா இருக்கும். அவரை சேருங்க – மேத்யூ ஹைடன் கருத்து

Hayden
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியானது வரும் ஜூன் 7-ம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான இறுதி அணியில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இல்லாதது இந்திய அணிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு என்று கூறலாம். ஏனெனில் அதிரடி பேட்ஸ்மேனான அவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்தார்.

Rishabh Pant Ind vs ENg Ravindra Jadeja

- Advertisement -

இவ்வேளையில் அவர் கடந்த ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி அடைந்த படுகாயம் காரணமாக தற்போது வரை அணியில் இணையாமல் இருக்கும் வேளையில் அவருக்கு பதிலாக கே.எஸ் பரத் இந்திய அணியின் டெஸ்ட் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் ரிஷப் பண்டிற்கு பதிலாக எந்த விக்கெட் கீப்பர் விளையாடினால் சரியாக இருக்கும் என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான மேத்யூ ஹைடன் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். அந்த வகையில் ரிஷப் பண்டின் இடத்தை இஷான் கிஷனால் நிரப்ப முடியும் என்று தெரிவித்துள்ள அவர் இது குறித்து கூறுகையில் :

Ishan-Kishan-1

நிச்சயம் நான் இந்திய அணியின் செலக்டராக இருந்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இஷான் கிஷனை தான் விளையாட வைத்திருப்பேன். ஏனெனில் இஷான் கிஷனால் நிச்சயம் ரிஷப் பண்ட் போன்று அதிரடியாக பேட்டிங் செய்யவும் விக்கெட் கீப்பிங் செய்யவும் முடியும்.

- Advertisement -

எனவே நிச்சயம் அவரைத்தான் இந்திய அணியில் இணைத்திருப்பேன். அவரைப் போன்ற ஒரு பேட்ஸ்மேன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக பேட்டிங் செய்யும்போது அது எதிரணியின் பவுலர்களுக்கும் அழுத்தத்தை கொடுக்கும். அந்த வகையில் இந்திய அணியின் டெஸ்ட் விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் தான் என்னுடைய தேர்வு என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : WTC Final : ஐபிஎல்’ல வேண்ணா சொதப்பிருக்கலாம் , ஃபைனலில் அவர் தான் இந்தியாவை ஜெயிக்க வைப்பாரு – மஞ்ரேக்கர் உறுதி

இருப்பினும் தற்போதைய டெஸ்ட் விக்கெட் கீப்பரான கே.எஸ் பரத் கடந்த பல ஆண்டுகளாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் இடம் பிடித்து அவரது இடத்தை நீண்ட காலத்திற்கு பின்னர் பிடித்துள்ளதால் அவரை அவ்வளவு எளிதில் இந்திய அணி மாற்றி விடாது என்றே தெரிவதால் கே.எஸ் பரத்தான் இறுதிப் போட்டியில் விளையாடுவார் என்று தெரிகிறது.

Advertisement