ஐபிஎல் கிடையாது.. ஆஸ்திரேலியாவில் சிக்கிடுவீங்க.. அதையும் தாண்டி அவர் அசத்துறாரா பாக்குறேன்.. ஹைடன் பேட்டி

Matthew Hayden 2
- Advertisement -

ஆஸ்திரேலியா – இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் மாதம் துவங்குகிறது. ஆஸ்திரேலியாவில் கடைசியாக 2018/19, 2020/21 ஆகிய வருடங்களில் நடைபெற்ற அடுத்தடுத்த தொடர்களை இந்தியா வென்றது. அதனால் ஆஸ்திரேலியாவில் அடுத்தடுத்த 2 தொடர்களை வென்ற முதல் ஆசிய அணியாகவும் இந்தியா வரலாறு படைத்தது.

அந்த வரிசையில் இம்முறை ரோஹித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா ஹாட்ரிக் வெற்றியை பெறுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இருப்பினும் இம்முறை இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வெல்ல தயாராக உள்ளதாக ஆஸ்திரேலிய ஸ்பின்னர் நேதன் லயன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். அத்துடன் 2024 இங்கிலாந்து தொடரில் தொடர்நாயகன் விருது வென்ற ஜெய்ஸ்வாலை வீழ்த்துவதற்கான திட்டத்தை வகுத்து வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.

- Advertisement -

சவாலான ஆஸ்திரேலியா:

இந்நிலையில் ஜெய்ஸ்வால் ஆட்டத்தை ஐபிஎல் தொடரில் பலமுறை பார்த்துள்ளதாக முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவான் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார். ஆனால் பெரிய மைதானங்களை கொண்ட ஆஸ்திரேலியாவில் பவுன்ஸ் அதிகமாக இருக்கும் என்று ஹைடன் கூறியுள்ளார். எனவே அங்கு முதல் முறையாக விளையாடப் போகும் ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாக அதிக வாய்ப்புள்ளதாக ஹைடன் தெரிவித்துள்ளார்.

அந்த சவால்களை கடந்து ஜெய்ஸ்வால் அசத்துகிறாரா என்பதைப் பார்க்க காத்திருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஜெய்ஸ்வாலுக்கு எதிராக தயாராவதாக நேதன் லயன் கூறினார். என்னுடைய கருத்துப்படி ஜெய்ஸ்வால் இந்திய கிரிக்கெட்டின் ஒரு சொத்து. அவர் அதை நிரூபித்து வருகிறார். இளம் ஜெய்ஸ்வால் எப்படி விளையாடுகிறார் என்பதை பார்ப்பதற்கு ஆவலாக இருக்கும்”

- Advertisement -

தரமான ஜெய்ஸ்வால்:

“அவர் ஒரு பேக்கேஜ். கவர்ஸ் திசை மேலே அடிக்கும் அவருடைய திறமை அபாரமானது. இருப்பினும் இங்குள்ள பவுன்ஸ்க்கு சாதகமான மைதானங்களில் அவர் எப்படி தன்னை அட்ஜஸ்ட் செய்து கொள்கிறார் என்பதை பார்க்க ஆவலுடன் உள்ளேன். அவர் ஐபிஎல் தொடரில் குறிப்பாக புல் ஷாட்டில் பந்தை கடினமாக அடிக்கக்கூடியவர் என்பதை நாங்கள் பார்த்தோம்”

இதையும் படிங்க: 6/3 டூ 236க்கு ஆல் அவுட்.. இங்கிலாந்து அசத்தலான துவக்கம்.. 4 ஓவர்களை வீணடித்த இலங்கை கேப்டன்

“ஆனால் இங்கே அவர் 3 உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களிடம் சவாலை சந்திப்பார். இங்குள்ள மைதானங்களும் பெரிதாக இருக்கும். எனவே பந்தை சரியாக காண்டாக்ட் செய்தால் மட்டுமே அது சிக்ஸாக பறக்கும். இல்லையென்றால் நீங்கள் எளிதாக கேட்ச்சாகி விடும். எனவே ஜெய்ஸ்வால் போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் அதற்கு தகுந்த அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

Advertisement