எங்ககிட்ட எல்லாத்துலயும் பேலன்ஸ் இருக்கு.. வெறியுடன் வரும் இந்தியாவை வீழ்த்துவோம்.. தெ.ஆ வீரர் பேட்டி

Matthew Breetze
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 25 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் தோற்றது. அடுத்ததாக நடைபெறும் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்திய அணி ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஆனால் இரண்டாவது போட்டியில் வென்ற தென்னாப்பிரிக்கா தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்துள்ளது.

இதைத் தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி டிசம்பர் 6ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. அப்போட்டியில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரில் தோல்வியை பரிசளித்த தென்னாப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகியுள்ளது. இந்நிலையில் 3வது போட்டியில் எப்படியாவது தங்களை தோற்கடிக்க வேண்டும் என்ற வெறித்தனத்துடன் இந்தியா வருமென்று தென் ஆப்பிரிக்க வீரர் மேத்தியூ பிரெட்ஸ்கே தெரிவித்துள்ளார்.

- Advertisement -

வெறியுடன் வரக்கூடிய இந்தியாவை:

ஆனால் தென்னாபிரிக்க அணி பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய அனைத்து துறைகளிலும் கச்சிதமான சமநிலையை கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அதனால் 3வது போட்டியிலும் வென்று டெஸ்ட் தொடரை போல ஒருநாள் தொடரிலும் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிப்போம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி மேத்தியூ பேசியது பின்வருமாறு.

“நாங்கள் மிகவும் நல்ல அணிக்கு எதிராக நல்ல கிரிக்கெட்டை விளையாட உள்ளோம். இந்தியா வெற்றிக்காக மிகவும் பசியுடன் வருவார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அது நிச்சயம் வென்றாக வேண்டிய போட்டி என்பதால் நல்ல சவால் இருக்கும். இருப்பினும் எங்களுடைய அணி நல்ல சமநிலையுடன் இருக்கிறது”

- Advertisement -

தெ.ஆ வீரர் நம்பிக்கை:

“எங்களிடம் சில முழுமையான பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். அடுத்ததாக மார்க்கோ யான்சன், தேவால்டு பிரேவிஸ், கோர்பின் போஸ்க் ஆகிய போட்டியை மாற்றக்கூடிய பவர்ஹவுஸ் பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கும் நாங்கள் பேட்டிங் துறையில் மிகுந்த தன்னம்பிக்கையுடன் இருக்கிறோம்”

இதையும் படிங்க: சோதனை முடிந்தால் தான் டி20 தொடரில் விளையாட முடியும்.. சுப்மன் கில்லுக்கு ஏற்பட்டுள்ள நிலை – விவரம் இதோ

“எனவே 2வது போட்டியைப் போலவே நாளையும் நாங்கள் செய்வோம். முதல் 2 போட்டிகளில் பனியின் தாக்கம் இருந்ததை நாங்கள் பார்த்தோம். எனவே 2வதாக பேட்டிங் செய்வது சாதகமாக இருக்கும். ஒருவேளை முதலில் பேட்டிங் செய்ய வேண்டிய நிலை வந்தாலும் தற்போதுள்ள தன்னம்பிக்கைக்கு நாங்கள் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்” என்று கூறினார்.

Advertisement