378 ரன்ஸ்.. நான்கு 50ஸ்.. ஆஸிக்கு எதிரான 2வது ஒன்டே’வில்.. தென் ஆப்ரிக்க வீரர் 2 அபார உலக சாதனை

Matthew Breetzke
- Advertisement -

ஆஸ்திரேலிய மண்ணில் தென்னாபிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற தென்னாப்பிரிக்கா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அடுத்ததாக 2வது போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள மெக்காய் நகரில் ஆகஸ்ட் 22ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 10.00 மணிக்கு துவங்கியது.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு ரிக்கல்டன் 8, கேப்டன் ஐடன் மார்க்ரம் 0 ரன்களில் சேவியர் பார்லெட் வேகத்தில் வெளியேறினார்கள். இருப்பினும் அடுத்ததாக வந்த மேத்யூ பிரீட்ஸ்கே அதிரடியாக விளையாடினார். அவருடன் எதிர்புறம் 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த டீ ஜோர்சி 38 (39) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

2 அபார சாதனை:

அடுத்ததாக வந்த இளம் வீரர் ஃஸ்டப்ஸ் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். மறுபுறம் தொடர்ந்து அசத்திய மேத்யூ அரை சதத்தை அடித்து தென்னாப்பிரிக்காவை மீட்டெடுத்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் 4வது விக்கெட்டுக்கு 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 8 பவுண்டரி 2 சிக்ஸருடன் 88 (78) ரன்கள் விளாசி அவுட்டானார்.

2025 பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் 26 வயதாகும் பிரீட்ஸ்கே அறிமுகமானார். தனது முதல் போட்டியிலேயே 150 ரன்கள் அடித்த அவர் 2வது போட்டியில் 83 ரன்கள் அடித்தார். அதைத்தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இத்தொடரில் அவர் இதுவரை 57, 88 ரன்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் 4 போட்டிகளிலும் 50+ ரன்கள் (150, 83, 57, 88) அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார்.

- Advertisement -

378 ரன்கள்:

அவரை தவிர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் வேறு யாரும் தங்களுடைய முதல் 4 போட்டிகளில் தொடர்ச்சியாக 50+ ரன்கள் அடித்ததில்லை. மேலும் தன்னுடைய முதல் 4 ஒருநாள் போட்டிகளில் பிரீட்ஸ்கே மொத்தம் 378* ரன்கள் அடித்துள்ளார். அதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் 4 போட்டிகளின் முடிவில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

இதையும் படிங்க: ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்ந்தெடுத்து அறிவித்த – அஜின்க்யா ரஹானே

இதற்கு முன் தென்னாப்பிரிக்காவின் தெம்பா பவுமா தனது 4 போட்டிகளில் 280 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் மறுபுறம் அசத்திய ஸ்டப்ஸ் 74 ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார். இறுதியில் வியான் முல்தர் 26, கேசவ் மகாராஜ் 22* ரன்கள் எடுத்த உதவியுடன் 49.1 ஓவரில் தென்னாப்பிரிக்கா 277 ரன்களை எடுத்து ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஆடம் ஜாம்பா 3, மார்னஸ் லபுஸ்ஷேன் 2, சேவியர் பார்லட் 3, நாதன் எலிஸ் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

Advertisement