- Advertisement -
உலக கிரிக்கெட்

463 ரன்ஸ்.. 5 முறை 50ஸ்.. ஓயாமல் சொல்லி அடிக்கும்.. 26 இளம் தெ.ஆ வீரர் இரட்டை உலக சாதனை

இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி செப்டம்பர் 4ஆம் தேதி நடைபெற்றது. இங்கிலாந்தில் நடைபெறும் அந்தத் 3 போட்டிகள் கொண்ட அத்தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த சூழ்நிலையில் துவங்கிய வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய தெனாப்பிரிக்காவுக்கு 73 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ரிக்கல்டன் 35 ரன்னில் அவுட்டானார். அவருடன் சேர்ந்து விளையாடிய ஐடன் மார்க்கம் அரை சதத்தை நழுவ விட்டு 49 ரன்னில் பெவிலியன் திரும்பினார். கேப்டன் பவுமா 4 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்த போதிலும் இளம் வீரர் மேத்தியூ பிரீட்ஸ்க் அதிரடியாக விளையாடினர்.

- Advertisement -

ஓயாமல் சொல்லி அடிக்கும் பிரீட்ஸ்க்:

அடுத்து வந்த ட்ரிஷ்டன் ஸ்டப்ஸ் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். அவருடன் சேர்ந்து விளையாடிய மேத்யூ அதிரடியாக அரை சதத்தை அடித்து 147 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 85 (77) ரன்களை விளாசி அவுட்டானார். இதையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானது முதல் இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலும் அவர் முறையே 150, 83, 57, 88, 85 ரன்கள் குவித்துள்ளார்.

இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் 5 போட்டிகளிலும் 50+ ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார். அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் 5 போட்டிகளில் அதிக ரன்கள் (463) குவித்த வீரர் என்ற உலக சாதனையையும் மேத்தியூ படைத்துள்ளார். இதற்கு முன் நெதர்லாந்தின் டாம் கூப்பர் தனது முதல் 5 போட்டிகளில் 374 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை.

- Advertisement -

2 உலக சாதனை:

தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் தம்முடைய பங்கிற்கு அரை சதத்தை அடித்த ஸ்டப்ஸ் 58 (62) ரன்னில் ரன் அவுட்டானார். லோயர் ஆர்டரில் நெருப்பாக விளையாடிய இளம் நட்சத்திர வீரர் தேவால்ட் பிரேவிஸ் 3 பௌண்டரி 3 சிக்சர்களை பறக்க விட்டு 42 (20) ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார். இறுதியில் கோர்பின் போஸ்க் 32* (29) ரன்கள் குவித்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தார்.

இதையும் படிங்க: 330 ரன்ஸ்.. லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவை முந்திய தெ.ஆ சாதனை.. இங்கிலாந்தை நொறுக்கி அபாரம்

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா 330/8 ரன்கள் குவித்து அசத்தியது. இங்கிலாந்து அணிக்கு அதிகபட்சமாக ஜோப்ரா ஆர்ச்சர் 4 விக்கெட்டுகள் எடுத்தார். இதைத் தொடர்ந்து 331 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து பேட்டிங் செய்து வருகிறது.

- Advertisement -