வீடியோ : ஷேன் வார்ன் போன்று லெக் ஸ்பின்னில் மாயாஜால பந்துவீசி பாகிஸ்தான் வீரரை க்ளீன் போல்ட் செய்த பார்க்கின்சன்

Parkinson
- Advertisement -

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் 2 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருந்த நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் முடிவில் 331 ரன்கள் குவிக்க அதனைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி அதனை சேசிங் செய்து அபார வெற்றி பெற்றது.

pak vs eng

- Advertisement -

அதுமட்டுமின்றி இந்த ஒருநாள் தொடரையும் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி சார்பாக கேப்டன் பாபர் அசாம் 158 ரன்களையும், விக்கெட் கீப்பர் ரிஸ்வான் 74 ரன்களை குவித்து பாகிஸ்தான் அணியின் ரன் குவிப்பு உதவினர். அதேபோன்று இங்கிலாந்து அணி சார்பாக ஜேம்ஸ் வின்ஸ் சதம் அடித்தும், கிரிகோரி 74 ரன்கள் அடித்து இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உதவினர்.

அனுபவ வீரர்கள் இன்றி இளம் வீரர்களுடன் விளையாடி வரும் இந்த இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் பார்கின்சன் பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்களான இமாம்-உல்-ஹக்கை கிளீன் போல்ட் செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

போட்டியின் 25வது ஓவரில் போது அவர் எடுத்த இந்த விக்கெட் போட்டியை மாற்றியது என்று கூறலாம். மேலும் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்சான பந்து மிடில் ஸ்டம்பை பதம் பார்த்தது ஷேன் வார்ன்னை நினைவு கூற வைத்தது என்றும் கூறலாம். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement