இந்தியா அணிக்கெதிராக முதல் வீரராக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் நிகழ்த்திய சாதனை – விவரம் இதோ

Hendry
- Advertisement -

மிட்சல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணியானது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களிலும் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளை வீழ்த்தி ஏற்கனவே இந்த நடப்பு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிவிட்டது. அதனை தொடர்ந்து நியூசிலாந்து அணியானது இந்த தொடரில் எஞ்சியுள்ள லீக் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக இன்று விளையாடி வருகிறது.

இந்திய அணிக்கெதிராக அசத்தல் சாதனை நிகழ்த்திய நியூசிலாந்து வீரர் :

அந்த வகையில் துபாய் சர்வதேச மைதானத்தில் மார்ச் இரண்டாம் தேதி துவங்கி நடைபெற்று வரும் இந்த கடைசி லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி நியூசிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சு எதிராக தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

- Advertisement -

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 249 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 79 ரன்களை குவித்தார். பின்னர் 250 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது நியூசிலாந்து அணியானது விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது நியூசிலாந்து அணி சார்பாக விளையாடிய அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான மேட் ஹென்றி இந்திய அணிக்கு எதிராக எந்த ஒரு வேகப்பந்து வீச்சாளரும் நிகழ்த்தாத சாதனையை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் இன்றைய போட்டியின் போது 8 ஓவர்கள் வீசிய அவர் 42 ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

இந்திய வீரர்களான சுப்மன் கில், விராட் கோலி, ஹார்டிக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது ஷமி ஆகியோரை ஆட்டமிழக்க வைத்த அவர் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் இந்திய அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை எடுத்த முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : இன்னைக்கும் டாசில் தோற்ற இந்திய அணி மோசமான சாதனை.. ரோஹித் சர்மாவுக்கு இப்படி ஒரு நிலையா?

இவருக்கு முன்னதாக நியூசிலாந்து அணி சார்பாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஜேக்கப் ஓரம் 5 விக்கெட்டுகளை எடுத்துள்ள வேளையில் தற்போது இரண்டாவது நியூசிலாந்து வீரராக அவர் இந்த பட்டியலில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement