இந்தியா இலங்கை தொடரில் இருந்து திடீரென விலகிய சீனியர் வீரர் – அப்போ டீம் அவ்ளோதான்

indvssl
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் ஆகியவை ஜூலை 13ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை இலங்கையில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை வீரர்கள் தற்போது இலங்கை திரும்ப இருக்கின்றனர். இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் கடந்த சில நாட்களாகவே சம்பள பிரச்சினை ஒரு முக்கிய விவாதமாக பேசப்பட்டு வருகிறது.

sl

- Advertisement -

வீரர்களுக்கு இனி அவர்களின் செயல்பாடுகளின் அடிப்படையிலேயே ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வீரர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் பல சீனியர் வீரர்கள் கிரிக்கெட் நிர்வாகத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். எனவே சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து விளையாட மறுக்கவும் முடிவு செய்துள்ளனர். ஒவ்வொரு தொடருக்கும் தனித்தனியாக ஒப்பந்த போடுவது தவறு என்றும் வீரர்களுக்கான சரியான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் நிர்வாகத்தை எதிர்த்து மேத்யூஸ் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல் தற்போது தான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 34 வயதாகும் மேத்யூஸ் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கடந்த பல மாதங்களாகவே விளையாடவில்லை என்றாலும் அணியின் சீனியர் வீரராக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது கிரிக்கெட் போர்டின் புதிய முடிவுகளால் அதிர்ச்சி அடைந்த அவர் இன்னும் சில நாட்களில் நான் ஓய்வு பெறுவேன் என்றும் அதுகுறித்து தான் இப்போது சிந்தித்து சிந்தித்து வருவதாகவும் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

mathews

இந்நிலையில் இலங்கை அணியின் இந்த ஒப்பந்தத்தை ஏற்க மறுத்த சீனியர் வீரரான ஆல்ரவுண்டர் மேத்யூஸ் இந்திய அணிக்கு எதிரான இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். மேலும் தான் நிர்வாகத்தை எதிர்த்து விலகுகிறேன் என்று நேரடியாக சொல்லாமல் தனிப்பட்ட காரணத்திற்காக அணி தேர்வில் இருந்து விலகி இருப்பதாக மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் மீது கடும் அதிர்ப்தி அடைந்துள்ள அவர் அதற்காகவே இந்தத் தொடரில் இருந்து விலகியுள்ளார் என்றும் விரைவில் ஓய்வு அறிவிப்பார் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement