இந்த வருட ஐ.பி.எல் தொடரில் கலக்க இருக்கும் 4 பவுலர்கள் இவர்கள் தான் – மேத்யூ ஹைடன் கணிப்பு

Hayden
- Advertisement -

இந்த வருட ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இதற்காக பல்வேறு ஏற்பாடுகளை பிசிசிஐ மிகவும் மும்முரமாக செய்து வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் அந்த அணி நிர்வாகத்திலும் ஒரு சில பிரச்சினைகள் இருந்து வந்தாலும் இதனை பிசிசிஐ பெரிதாக கண்டு கொண்டதில்லை. இந்த பிரச்சினைகள் வெகு சீக்கிரத்தில் முடிந்துவிடும் எப்படியும் ஐபிஎல் தொடர் கண்டிப்பாக நடைபெறும்.

இதற்காக அனைத்து அணி வீரர்களும் கடந்த வாரமே துபாய் சென்று சேர்ந்தனர். தற்போது சில நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு சென்னை அணியை தவிர்த்து மற்ற அணி வீரர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மைதானத்தில் தீவிர பயிற்சி செய்து வருகின்றனர். இந்த முறை ஐ.பி.எல் தொடர் முழுவதும் ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய மூன்று மாதங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மைதானங்கள் சற்று வித்தியாசமானவை. இந்திய மைதானங்களை போல் இருக்காது.

- Advertisement -

இதன் காரணமாக இங்கு விளையாடும் போது பந்து வீச்சாளர்களின் கை ஓங்கி இருக்கும் என்று பல விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரும் மற்றும் முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் மேத்யூ ஹைடன் பேசுகையில்….இந்த வருட ஐபிஎல் தொடரில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று நம்புகிறேன்.

Bhuvi

ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடிவரும் புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் மிகவும் நேர்த்தியான மிகச் சிறந்த பந்து வீச்சாளர்கள். இவர்களுக்கு அனுபவம் அதிகம். இந்த வருட ஐ.பி.எல் தொடரில் யாரையும் கணிக்க முடியாது. அதனால் யார் வேண்டுமானாலும் இத்தொடரில் மிகப் பெரிய ஸ்டாராக மாறலாம்.

Jadeja

அதே நேரத்தில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகிய வீரர்கள் எடுத்துக்கொள்ளலாம். இவர்களுக்கும் 100 போட்டிகளுக்கு மேல் ஆடிய அனுபவம் இருக்கிறது. இவர்கள் எல்லாம் கண்டிப்பாக நன்றாக விளையாடுவார்கள் என்று தெரிவித்திருக்கிறார் மேத்யூ ஹைடன். மேத்யூ ஹைடன் குறிப்பிட்ட அனைவருமே இந்திய பந்துவீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement