
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் மினி ஏலமானது அபுதாபி நகரில் இன்று நடைபெற்றது. இந்த மெகா ஏலத்தின் போது அதிகபட்ச விலைக்கு ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீன் கொல்கத்தா அணியால் வழங்கப்பட்டார். இந்திய மதிப்பில் சுமார் 25 கோடி 20 லட்சம் ரூபாய் இந்திய தொகைக்கு அவரை கே.கே.ஆர் அணி ஏலத்தில் எடுத்திருந்தது.
முன்னதாக மிட்சல் ஸ்டார்க் கடந்த முறை 24 கோடியே 75 லட்ச ரூபாய் என்கிற பெரிய விலைக்கு ஏலம் போன நிலையில் தற்போது அவரை கடந்து கேமரூன் கிரீன் சாதனை நிகழ்த்தியுள்ளார். இந்த மினி ஏலத்தில் கே.கே.ஆர் மற்றும் சிஎஸ்கே அணி ஆகியவை அதிக கையிருப்பு தொகையுடன் ஏலத்தில் பங்கேற்றிருந்த வேளையில் இவ்விரு அணிகளும் முக்கியமான வீரர்களை ஏலத்தில் எடுக்க கடுமையான போட்டியை வெளிப்படுத்தி இருந்தது.
அந்த வகையில் கே.கே.ஆர் அணி ஆல்ரவுண்டாக கேமரூன் கிரீனையும், பந்துவீச்சாளராக மதீஷா பதிரானாவையும் எடுத்து தங்களது அணியை பலப்படுத்தி உள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு சென்னை அணிக்காக 13 கோடி ரூபாய் என்று விலைக்கு விளையாடியிருந்த பதிரானா சிஎஸ்கே அணியிலிருந்து கழட்டி விடப்பட்ட பின்னர் தற்போது நடைபெற்று முடிந்த மினி ஏலத்தில் 18 கோடி ரூபாய்க்கு கே.கே.ஆர் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.
சென்னை அணியில் இருந்து கழட்டி விடப்பட்ட பதிரானவை கே.கே.ஆர் அணி வாங்கியது. இப்படி பதிரானாவை கே.கே.ஆர் அணி வாங்கியுள்ளதால் அந்த அணியின் பந்துவீச்சு யூனிட்டுக்கும் இந்த முடிவு பலத்தை சேர்த்திருக்கிறது என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சிஎஸ்கே அணி கழட்டிவிட்டாலும் பதிரானா ஐபிஎல் ஏலத்தில் புதிய சாதனையுடன் கே.கே.ஆர் அணிக்கு சென்றுள்ளார்.
அதாவது இதுவரை ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடியுள்ள எந்த ஒரு இலங்கை வீரரும் வாங்காத ஒரு மிகப்பெரிய தொகையை மதீஷா பதிரானா பெற்றுள்ளார். இந்திய மதிப்பில் சுமார் 18 கோடி ரூபாய் என்கிற மிகப்பெரிய தொகைக்கு அவர் கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க : கம்பீர் நீங்க ஒன்னும் இந்தியாவின் சிஇஓ கிடையாது.. அவரை செயல்பட விடுங்க.. ஹர்ஷா போக்லே விமர்சனம்
இதன் மூலம் ஐ.பி.எல் போட்டிகளில் அதிக தொகைக்கு ஏலம் போன இலங்கை வீரர் என்ற சாதனையை மதீஷா பதிரானா நிகழ்த்தியுள்ளார். இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2025 ஐ.பி.எல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்த அவர் ஒட்டுமொத்தமாக 32 போட்டியில் விளையாடி 47 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.