இலங்கை அணிக்கு கிடைத்த மற்றொரு மலிங்கா. பௌலிங் ஸ்டைல் பாருங்க – வைரலாகும் வீடியோ

Malinga
- Advertisement -

இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மலிங்கா தனது வித்தியாசமான பந்துவீச்சு மற்றும் துல்லியமான யார்க்கர் மூலம் உலக அளவில் பிரபலம் ஆனவர். இவர் இலங்கை அணிக்காக தனது பந்து வீச்சின் மூலம் பல முறை வெற்றிகளைத் தேடித் தந்துள்ளார். அவர் தற்போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்று டி20 போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் அவர் ஓய்வு பெற்ற அவருக்கு பதிலாக இன்னொரு வீரரை அந்த அணி தற்போது வரவேற்க உள்ளது. அதன்படி மலிங்காவை போலவே 17 வயது இளம் வீரரான ஒருவர் அவரை போன்ற வித்தியாசமான ஸ்டைலில் பந்து வீசி வருகிறார். 17 வயதாகும் மதீசா பதிரானா எனும் இளைஞர் 7 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார் .மேலும் அவர் மலிங்காவை போலவே துல்லியமாக யார்க்கர் வீசும் திறனைப் பெற்றுள்ளார்.

அவரின் பந்துவீச்சை கணிக்க முடியாமல் பேட்ஸ்மேன்கள் திணறுகிறார்கள். 19 வயதுக்குட்பட்டோர் அணியில் இடம்பிடித்துள்ள இவர் மலிங்காவை போன்ற பெரும் புகழ் பெறுவார் என்றும் மலிங்கா போன்று அவர் பந்து வீசும் வீடியோவினை இணையத்தில் பதிவிட்டு உள்ளனர். அவரது இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement