நியூசிலாந்து அணிக்கு சாதகமான பாதையில் சென்று கொண்டிருக்கும் அரையிறுதி போட்டி – ரசிகர்கள் அதிர்ச்சி

Nz

நேற்றைய முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டி மழையால் தடைபட்டதால் மீதமுள்ள ஆட்டம் இன்று நடைபெற இருக்கிறது. 46.1 ஓவர்களில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் சேர்த்து இருப்பது குறிப்பிடத்தக்கது .மேலும் மீதமுள்ள 3.5 அவர்கள் இன்று வீசப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pitch

அதன் பிறகு இந்திய அணி தனது பேட்டிங்கை தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. ஒருவேளை இன்று மழை பெறாமல் இருந்தால் இந்திய அணி 50 ஓவர்கள் கொண்ட போட்டியாக முழுவதுமாக ஆடும். இடையில் மழை வந்தால் போட்டி 20 ஓவர்கள் ஆக மாற்றப்படும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஒருவேளை 20 ஓவர் ஆக மாற்றப்பட்டும் மழை பெய்தால் இந்திய அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

ஒருவேளை மழை பெய்து ஆட்டம் தடைபட்டு டக்வொர்த் லூயிஸ் விதிப்படி போட்டி மாற்றியமைக்கப்பட்டால் அது நியூசிலாந்து அணிக்கு சாதகமாக அமையும். ஏனெனில் 46 ஓவர்களில் இந்திய அணிக்கு 236 ரன்கள் இலக்காக அமைக்கப்படும். 20 ஓவர்களாக மாற்றப்பட்டால் 148 என்ற இலக்கு அமைக்கப்படும். அவ்வாறு மாற்றப்படும்போது மைதானத்தின் ஈரப்பதம் மற்றும் காற்றில் நிலவும் குளிர் போன்றவை நியூஸிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமையும்.

Rain

மேலும் மைதானம் மழையின் காரணமாக மைதானம் ஸ்லோவாக இருக்கும் இதனால் இந்திய அணியினரால் இந்த இலக்கை நிச்சயம் துரத்த முடியாது என்று கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் போட்டியின் இடையிடையே மழை பொழிந்தால் இந்திய வீரர்களுக்கு சேஸிங்கின்போது பவுண்டரிகள் அடிப்பதற்கு கடினமாக இருக்கும்.

- Advertisement -

Rain

இந்திய அணி விக்கெட்டை இழக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே போட்டி கொஞ்சம் கொஞ்சமாக நியூஸிலாந்து கைகளுக்கு மாறி கொண்டு வருகிறது. இந்திய அணி ஜெயிக்க வேண்டுமென்றால் இன்று மழை பொழிந்தால் மட்டுமே போதும் நேரடியாக இறுதி போட்டிக்கு நுழையும். மற்றபடி இப்போது நியூசிலாந்தின் கைகளுக்கு போட்டி மாறி வருவது குறிப்பிடத்தக்கது.