20 வருஷம் விளையாடுன எனக்கு கிரிக்கெட்டிலிருந்து சரியான ரிட்டயர்மென்ட் கெடைக்கல – சீனியர் வீரர் வருத்தம்

Mortaza
- Advertisement -

பங்களாதேஷ் அணியின் முன்னாள் கேப்டன் மஷ்ரஃபே மோர்டேசா தனது ஒருநாள் போட்டிக்களுக்கான ஓய்வு திருப்தி அளிக்காத வண்ணம் நடந்து விட்டதாக சமீபத்தில் கூறியுள்ளார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக வங்காளதேச அணிக்காக மிக சிறப்பாக விளையாடி வந்த எனக்கு சரியான வகையில் ஓய்வு அளிக்கப்படவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார். பங்களாதேஷ் அணிக்காக கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் வரை விளையாடிய மிக அனுபவம் வாய்ந்த வீரராக பார்க்கப்படும் இவர் அளித்த இந்த கருத்து ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

பங்களாதேஷ் அணிக்காக 2001ஆம் ஆண்டு அறிமுகமான மஷ்ரஃபே மோர்டேசா இதுவரை 36 டெஸ்ட் போட்டிகளில் 220 ஒருநாள் போட்டிகள் மற்றும் 54 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.சமீபத்தில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் 8 போட்டிகளில் விளையாடிய மாஷ்ரஃப் மோர்டேசா ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றி மிகப்பெரிய அளவில் ஏமாற்றம் அளித்தார்.

அதன் பிறகு தற்போது ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரில் , பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நஸ்முள் ஹாசன் என்னிடம் ஓய்வு குறித்து கேள்வி எழுப்பினார். எனக்கு அந்த 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் நடந்த கசப்பான நினைவுடன் ஓய்வு பெற விரும்பவில்லை. இன்னொரு உலக கோப்பை ஆடுவதில் நான் ஆர்வம் காட்டினேன்.

இருந்தபோதிலும் சீனியர் வீரரான தன்னை அடுத்த உலகக் கோப்பைக்கு பொருட்படுத்த மாட்டார்கள் என்றும், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் கடைசியாக ஆடி கொள்ளுமாறு என்னை வற்புறுத்தினார் என்று மாஷ்ரஃப் மோர்டேசா கூறினார். வேறுவழியின்றி சமீபத்தில் நடந்து முடிந்த ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரில் தனது கடைசி ஒருநாள் போட்டியை விளையாடி மஷ்ரஃபே மோர்டேசா சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

இது குறித்து மேலும் பேசிய மாஷ்ரஃப் மோர்டேசா , தற்போது உள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணியில் மிகவும் திறமையான மற்றும் உடற் தகுதியில் சிறந்த வீரர் என்றால் அது தான் மட்டும் தான் என்றும் கூறியுள்ளார். மேலும் கிரிக்கெட் மீதான காதல் தன்னை விட்டு அவ்வளவு சீக்கிரம் போய் விடாது என்று கூறியவர் இனி டொமஸ்டிக் ஆட்டங்களில் விளையாட வேண்டும் கூறியுள்ளார்.

Advertisement