ரோஹித்தை நீக்கி பாண்டியாவை மும்பை அணி கேப்டனாக்க இதுதான் காரணம்னு நெனைக்குறேன் – மார்டின் குப்தில் கருத்து

Guptill
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா கடந்த 2022-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக மும்பை அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டார். பின்னர் அதே ஆண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் அணி அவரை ஏலத்திற்கு முன்பாகவே 15 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாகவும் நியமித்தது. அப்படி கேப்டனாக நியமிக்கப்பட்ட முதல் தொடரிலேயே ஹர்திக் பாண்டியா குஜராத் அணிக்காக ஐபிஎல் தொடரை வென்று பரிசளித்தார்.

அதன்பிறகு இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2023-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் இறுதிப்போட்டி வரை முன்னேறிய குஜராத் அணி சிஎஸ்கே அணியிடம் தோல்வியை சந்தித்து இரண்டாம் இடத்தை பிடித்து வெளியேறியிருந்தது. அதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரானது அடுத்த கோடை காலத்தில் நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் அந்த தொடருக்கு முன்னதாக தற்போது வீரர்களின் மினி ஏலமானது நடைபெறவுள்ள வேளையில் டிரேடிங் முறையில் சில வீரர்கள் அணி மாற்றம் செய்யப்பட்டனர். அதிலும் குறிப்பாக குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹார்டிக் பாண்டியாவை மும்பை அணி மீண்டும் டிரேடிங் முறையில் 15 கோடி ரூபாய் கொடுத்து அவர்களது அணிக்கே திருப்பி கொண்டது.

இந்த விடயம் அனைவரது மத்தியிலும் பெரியளவு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள வேளையில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகமும் அடுத்த ஐபிஎல் தொடருக்கான கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்துள்ளது. இதன் காரணமாக தற்போது ரோஹித்தின் ரசிகர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியின் மீது அதிருப்தியில் உள்ளனர். இப்படி ரோகித் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய கேப்டனாக பாண்டியா நியமிக்கப்பட்டது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் துவக்க வீரரான மார்டின் குப்தில் இதுகுறித்து கூறுகையில் : ஹார்டிக் பாண்டியா மும்பை அணியின் இளம் வீரராக இருப்பதனாலே கேப்டன் பதவி வழங்கப்பட்டிருப்பதாக நான் நினைக்கிறேன். ஏனெனில் ரோகித் சர்மா மற்றும் நான் எல்லோரும் ஒரே சமமான வயது உடையவர்கள். ரோகித் சர்மாவால் இன்னும் எத்தனை ஆண்டுகள் விளையாட முடியும் என்பதை உறுதியாக கூற முடியாது. ஏனெனில் தற்போது அவருக்கு 36 வயதாகிவிட்டது. இருப்பினும் அவரது கரியர் மிகச் சிறப்பாக இருந்தது.

இதையும் படிங்க : 10 ஓவரில் 10 ரன்ஸ் கூட இல்ல.. 21ஆம் நூற்றாண்டில் மேஜிக் ஸ்பெல்லை வீசிய பாகிஸ்தான்.. ஆஸியை வீழ்த்துமா?

இருந்தாலும் மும்பை அணியின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு ஹார்டிக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். ஏனெனில் ஹார்டிக் பாண்டியா மும்பை அணிக்காக தான் தனது கரியரை ஆரம்பித்தார். அதோடு குஜராத் அணிக்காக கடந்த இரண்டு ஆண்டுகள் மிகச் சிறப்பாக கேப்டன்சி செய்த அவர் அடுத்த 5-6 ஆண்டுகளுக்கு மும்பை அணியின் கேப்டனாக தொடர்ந்து செயல்பட முடியும் என்பதாலேயே அவரை அவர்கள் கேப்டனாக நியமித்திருக்கலாம் என மார்டின் குப்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement