10 ஓவரில் 10 ரன்ஸ் கூட இல்ல.. 21ஆம் நூற்றாண்டில் மேஜிக் ஸ்பெல்லை வீசிய பாகிஸ்தான்.. ஆஸியை வீழ்த்துமா?

Pak vs AUS Test
- Advertisement -

பாகிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் போன்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டி டிசம்பர் 14ஆம் தேதி பெர்த் நகரில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 487 ரன்கள் குவித்து அசத்தியது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக தன்னுடைய கடைசி டெஸ்ட் தொடரில் விளையாடும் நட்சத்திர துவக்க வீரர் டேவிட் வார்னர் சதமடித்து 164, மிட்சேல் மார்ஷ் 90 ரன்கள் எடுத்த நிலையில் பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக அறிமுக போட்டியில் அசத்திய அமீர் ஜமால் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தானுக்கு அப்துல்லா ஷபிக் 42, இமாம்-உல்-ஹக் 62, கேப்டன் ஷான் மசூட் 30 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நல்ல ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

துல்லியமான பவுலிங்:
அதனால் பெரிய ரன்களை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தானுக்கு மிடில் ஆர்டரில் நட்சத்திர வீரர் பாபர் அசாம் 21, சௌத் ஷாக்கீல் 28, சர்ப்ராஸ் அகமது 3 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இறுதியில் ஆஹா சல்மான் 28* ரன்கள் எடுத்தும் பாகிஸ்தானை 271 ரன்களுக்கு சுருட்டிய ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக நேதன் லயன் 3, மிட்சேல் ஸ்டார்க் மற்றும் கேப்டன் பட் கமின்ஸ் தலா 2 விக்கெட்களை எடுத்தனர்.

அதை தொடர்ந்து 216 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை துவங்கிய ஆஸ்திரேலியாவுக்கு இம்முறை பாகிஸ்தான் பவுலர்கள் துல்லியமாக பந்து வீசி மிகப்பெரிய சவாலை கொடுத்தனர். அதற்கு தாக்கு பிடிக்க முடியாமல் டேவிட் வார்னரை ஆரம்பத்திலேயே டவுட்டாக்கிய குர்ரம் ஷேசாத் அடுத்ததாக வந்த மார்னஸ் லபுஸ்ஷேனையும் 2 ரன்களில் காலி செய்து பாகிஸ்தானுக்கு நல்ல துவக்கத்தை பெற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

அப்படி ஆரம்பத்திலேயே 2 விக்கெட்டுகள் விழுந்ததால் மேற்கொண்டு விக்கெட்டை எளிதில் விடக்கூடாது என்பதற்காக உஸ்மான் கவாஜா – ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் நிதானமாக விளையாடினார்கள். மறுபுறம் பாகிஸ்தானும் எளிதில் ரன்கள் விடாமல் துல்லியமாக பந்து வீசியதால் முதல் 10 ஓவர்களில் ரசிகர்கள் தூங்கும் அளவுக்கு விளையாடிய ஆஸ்திரேலியா வெறும் 7/2 ரன்களை 0.70 என்ற ரன்ரேட்டில் மட்டுமே எடுத்தது. இப்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் 21ஆம் நூற்றாண்டில் கடந்த 23 வருடங்களில் ஒரு இன்னிங்ஸின் முதல் 10 ஓவர்களில் 10 ரன்களை கூட எடுக்காமல் ஆஸ்திரேலியா திண்டாடியது இதுவே முதல் முறையாகும்.

இதையும் படிங்க: 36 வயசுன்னா செலக்டட்.. பேசாம சென்னை வந்துருங்க.. ரோஹித் சர்மாவுக்கு முன்னாள் சிஎஸ்கே வீரர் அழைப்பு

அந்தளவுக்கு 2வது இன்னிங்ஸில் பாகிஸ்தானின் பவுலிங் மேஜிக் போல துல்லியமாக இருந்தது என்றே சொல்லலாம். ஆனாலும் 3வது நாள் முடிவில் நிதானமாக விளையாடியே கவாஜா 34*, ஸ்மித் 43* ரன்கள் எடுத்ததால் ஆஸ்திரேலியா 300 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அதனால் இந்த போட்டியில் பாகிஸ்தான் வெல்வது சந்தேகமாகவே பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement