சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய கேப்டன் ரோஹித்தை பின்னுக்கு தள்ளிய நியூசி வீரர் கப்தில் – விவரம் இதோ

Guptill-and-Rohit
- Advertisement -

நியூசிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது ஸ்காட்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒரு போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. அதன்படி நியூசிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி எடின்பர்க் நகரில் நேற்று நடைபெற்றது.

Guptill

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியானது ஐந்து விக்கெட்டுகளை இழந்து 225 ரன்கள் குவித்தது. பின்னர் 226 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஸ்காட்லாந்து அணியானது 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை மட்டுமே குவித்து 68 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்த போட்டியில் நியூசிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரர் பின் ஆலன் 56 பந்துகளில் 101 ரன்கள் குவித்து அசத்தினார். அதேபோன்று மற்றொரு துவக்க வீரரான மார்ட்டின் கப்தில் 40 ரன்களை குவித்து அசத்தியிருந்தார்.

இந்த போட்டியில் 21 ரன்கள் எடுத்திருந்தபோது நியூசிலாந்து துவக்க வீரரான மார்டின் கப்தில் டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனையை ஒன்றினை படைத்து அசத்தினார். அதன்படி இதுவரை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ரோகித் சர்மாவை அவர் பின்னுக்கு தள்ளியுள்ளார்.

- Advertisement -

இதுவரை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 128 இன்னிங்ஸ்களில் பங்கேற்றுள்ள ரோகித் சர்மா 3379 ரன்கள் குவித்து முதலிடத்தில் இருந்தார். ஆனால் அவரை தற்போது 12 போட்டிகளுக்கு முன்னதாகவே 116 இன்னிங்ஸ்களில் 3399 ரன்கள் குவித்து மார்டின் கப்தில் ரோஹித்தை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.

இதையும் படிங்க : IND vs WI : அதுக்கு பேசாமல் அவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் – மாறிமாறி சொதப்பிய 2 இளம் வீரர்களை கலாய்க்கும் ரசிகர்கள்

இந்த பட்டியலில் முதலிடத்தில் மார்டின் கப்தில் (3399 ரன்கள்), இரண்டாவது இடத்தில் ரோஹித் சர்மா (3379), மூன்றாவது இடத்தில் விராட் கோலி (3308 ரன்கள்) இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement