ஐ.பி.எல் தொடரில் நான் விலைபோகாததும் ஒரு வகையில் நல்லது தான் – குத்திக்காட்டி பேசிய மார்னஸ் லாபுஷேன்

Marnus

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர் என்றாலே விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. குறிப்பாக ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர்களை ஏலத்தில் எடுக்க அனைத்து அணிகளும் போட்டி போடும். இப்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், எட்டு அணிகளுக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலிய வீரர்கள் மற்றும் அந்த அணிகளின் பயிற்சியாளர்கள் என்று இந்த தொடரில் 30க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் பங்கு பெற்றிருக்கின்றனர்.

ipl

இந்நிலையில் உருமாறிய கொரானா வைரஸால் இந்தியாவில் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த உருமாறிய கொரானா வைரஸினால் ஆஸ்திரேலியா பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்றெண்ணி அந்நாடு இந்தியாவுடனான விமான போக்குவரத்தை மே 15-ஆம் தேதி வரை தடை செய்திருக்கிறது. இந்ந தடை அறிவிக்கப்பட்டதும் கொரானா தொற்றின் அச்சம் காரணமாக ஆஸ்திரேலியா வீரர்களான கேன் ரிச்சார்ட்சன், ஆடம் ஜாம்பா மற்றும் ஆண்ட்ரு டை ஆகியோர் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பி விட்டனர்.

இனிமேல் ஆஸ்திரேலிய வீரர்கள் தொடரிலிருந்து விலகி தங்களது சொந்த நாட்டிற்கு திரும்புவது சிக்கலான ஒன்றாகும். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தின்போது, எந்த அணியாலும் ஏலத்தில் எடுக்கப்படாத ஆஸ்திரேலிய வீரரான மார்னஸ் லபுச்சேன் ஐபிஎல் தொடரைப் பற்றி பேட்டி அளித்திருக்கிறார். அப்பேட்டியில் அவர் கூறியதாவது :

Marnus

ஐபிஎல் தொடர் என்பது உலகின் தலைசிறந்த தொடர்களில் ஒன்றாகும். அத்தொடரில் ஒரு வீரராக பங்கு பெறுவதை அனைத்து நாட்டு வீரர்களும் விரும்புவர். ஆனால் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தின் போது என்னை எந்த அணியும் ஏலத்தில் எடுக்காதது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனால் இப்போது இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரானா தொற்றின் அச்சத்தின் காரணமாக ஆஸ்திரேலிய வீரர்கள் தொடரை விட்டு விலக நேருவதை பார்க்கும்போது, நான் ஏலத்தில் எடுக்கப்படாதது எனக்கு மறைமுகமாக வழங்கப்பட்ட ஆசீர்வாதம் என்றே நான் கருதுகிறேன் என்று கூறினார்.

- Advertisement -

Marnus

அதேவேளையில் ஐ.பி.எல் தொடரில் ஏலம் எடுக்கப்படாததால் நான் உள்ளூர் தொடரையும் வென்றிருக்கிறேன் என்று கூறினார். கடந்த 2018 ஆம் ஆண்டு பாகிஸ்தான் தொடரின்போது ஆஸ்திரேலியா அணிக்காக அறிமுகமான மார்னஸ் லபுச்சேன், தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் தவிர்க்க முடியாத வீரராக மாறினார். ஆனால் அவர் ஒரு டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் மட்டுமே, என்பதால் அவரை கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் எந்த அணிகளும் அவரை ஏலத்தில் எடுக்க முன்வராதது குறிப்பிடத்தக்கது.