ஆர்ச்சர் பந்தில் அடிவாங்கிய பிறகும் நான் தொடர்ந்து விளையாட இதுவே காரணம் – மார்னஸ் லாபுசாக்னே

Archer
- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது ஆஷஸ் தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த இரண்டாவது போட்டி இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது.

- Advertisement -

முதல் இன்னிங்சில் ஆர்ச்சர் பந்துவீச்சில் பலமாக அடி வாங்கிய ஸ்மித் இரண்டாவது இன்னிங்சில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக மாற்று வீரர் பேட்டிங் செய்த அதிசய நிகழ்வு நிகழ்ந்தது. அந்த சாதனைக்கு சொந்தக்காரராக மார்னஸ் லாபுசாக்னே மாறினார்.

ஆனால் மார்னஸ் லாபுசாக்னே பேட்டிங் செய்ய இரண்டாவது இன்னிங்சில் வந்ததும் ஆர்ச்சர் பந்துவீச்சில் இரண்டாவது பந்திலேயே ஹெல்மெட்டில் அடி வாங்கினார். அவருக்கும் பலமான அடி ஹெல்மெட்டில் விழுந்தது. ஆனால் சிறிய பரிசோதனைக்கு பிறகு அவர் மீண்டும் உடனே எழுந்து விளையாட தயாரானார்.

Marnus 1

அதற்கான காரணத்தையும் அவர் தற்போது தெரிவித்துள்ளார். அதன்படி அவர் தெரிவித்ததாவது : நான் ஸ்மித் பதிலாக பேட்டிங் செய்ய வரும் பொழுது மிக மன உறுதியுடன் களத்திற்கு வந்தேன். ஆனால் வந்த இரண்டாவது பந்திலேயே பவுன்சர் மூலம் தாக்கப்பட்டு நான் கீழே விழுந்ததும் எனக்கு மீண்டும் விளையாட வேண்டும் என்ற எண்ணம் வர காரணம் யாதெனில் ஏற்கனவே ஸ்மித் அடிபட்டு விளையாட முடியாமல் உள்ளார்.

Marnus

ஒரு பக்கம் அணியில் இரண்டு விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்து உள்ளதால் அணியை நின்று காப்பாற்ற வேண்டும் என்று நான் நினைத்தேன். மேலும் அணியின் கேப்டன் என்னிடம் அதை மட்டுமே எதிர்பார்ப்பார் என்றும் எனக்கு தெரியும். எனவே அடிபட்ட சூழலை அப்படியே மறந்து விட்டு தொடர்ந்து பேட்டிங் செய்து அணியை டிராவை நோக்கி எடுத்துச் செல்ல வேண்டும் என்று மட்டுமே நினைத்துக் கொண்டேன். அந்த நினைப்பே என்னை அந்த நிகழ்வு இருந்து மீட்டு மீண்டும் சிறப்பாக விளையாட செய்தது என்று கூறினார்.

Advertisement