சூதாட்ட புகாரில் வசமாக சிக்கிய வெ.இ ஜாம்பவான் வீரர் – 4 விதிமுறை மீறல், மெகா தண்டனை கொடுக்கும் ஐசிசி – நடந்தது என்ன

Marlon Samuels WI 2012 2016 T20 world Cup
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படுகிறோமோ இல்லையோ சூதாட்ட புகாரில் சிக்கினால் மிகப்பெரிய அவமான பெயரை காலத்திற்கும் சுமக்க வேண்டும் என்றே சொல்லலாம். அந்த வரிசையில் வெஸ்ட் இண்டீஸ் சேர்ந்த நட்சத்திர முன்னாள் ஜாம்பவான் வீரர் மர்லான் சாமுவேல் தற்போது மிகப்பெரிய சூதாட்டப் புகாரில் ஆதாரப்பூர்வமாக சிக்கியுள்ளது ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. ஜமைக்காவை சேர்ந்த அவர் 2000ஆம் ஆண்டு சர்வதேச அரங்கில் அறிமுகமாகி 3 வகையான கிரிக்கெட்டிலும் 342 போட்டிகளில் விளையாடி 17 சதங்கள் உட்பட 11134 ரன்களை எடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

அதிலும் குறிப்பாக 2012, 2016 ஆகிய டி20 உலக கோப்பையின் மாபெரும் ஃபைனலில் அடித்து நொறுக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்தி ஆட்டநாயகன் விருது வென்ற அவர் வெஸ்ட் இண்டீஸ் 2 சாம்பியன் பட்டங்களை வெல்வதற்கு முக்கிய பங்காற்றியதை யாராலும் மறக்க முடியாது. அப்படி டி20 கிரிக்கெட்டில் முரட்டுத்தனமாக பேட்டிங் செய்யும் திறமையை கொண்டிருந்த அவர் உலகம் முழுவதிலும் நடைபெற்ற பல்வேறு பிரீமியர் லீக் டி20 தொடர்களிலும் விளையாடி ஒரு கட்டத்திற்கு பின் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக வாய்ப்பு கிடைக்காததால் ஓய்வு பெற்றார்.

- Advertisement -

ஐசிசி தண்டனை:
இந்நிலையில் எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சாமுவேல்ஸ் 4 குற்றங்களில் குற்றவாளி என ஊழல் எதிர்ப்பு தீர்ப்பாயத்தின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற அபுதாபி டி10 லீக் தொடரில் சாமுவேல்ஸ் 4 ஊழல் தடுப்பு விதிமுறைகளை மீறியதாக கடந்த 2021இல் நடத்திய விசாரணையின் முடிவில் ஐசிசி குற்றம் சுமத்தியது. இந்நிலையில் 42 வயதாகும் சாமுவேல் தீர்ப்பாயத்தில் நடந்த விசாரணையில் தன்னுடைய உரிமையை பயன்படுத்திய பின்னர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.

இதை தொடர்ந்து அவருக்கான தகுந்த தண்டனைகள் விரைவில் வெளியாகும் என்று ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவர் மீறிய 4 விதிமுறைகளின் விவரங்களையும் ஐசிசி பட்டியலிட்டுள்ளது பின்வருமாறு:
விதிமுறை 2.4.2 : விளையாட்டை கொண்டு வரக்கூடிய சூழ்நிலைகளில் ஏதேனும் பரிசு, பணம், விருந்தோம்பல் அல்லது பிற நன்மையின் ரசீது ஆகியவற்றைப் பெற்றதை நியமிக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு அதிகாரியிடம் வெளிப்படுத்த தவறி கிரிக்கெட்டுக்கு அவப்பெயராக நடந்து கொண்டது.
விதிமுறை 2.4.3 : 750 அமெரிக்க டாலர் அல்லது அதற்கு அதிகமான மதிப்புள்ள விருந்தோம்பலின் அதிகாரப்பூர்வ ரசீதை ஊழல் எதிர்ப்பு அதிகாரியிடம் வெளிப்படுத்த தவறியது.
விதிமுறை 2.4.6 : விசாரணையின் போது ஊழல் எதிர்ப்பு அதிகாரியிடம் விசாரணைக்கு தேவையான போதுமான ஒத்துழைப்பு கொடுக்காதது.
விதிமுறை 2.4.7 : விசாரணைக்கு தொடர்புடையதாக இருக்கக்கூடிய தகவல்களை மறைப்பதன் வாயிலாக நியமிக்கப்பட்ட ஊழல் தடுப்பு அதிகாரியின் விசாரணையை தடுப்பது அல்லது தாமதப்படுத்துவது.

- Advertisement -

முன்னதாக கடந்த 2008ஆம் ஆண்டு இதே போல பணம் பெற்றுக் கொண்டு கிரிக்கெட்டின் உண்மை தன்மைக்கு எதிராக விளையாடியதற்காக சாமுவேல்ஸ் 2 வருடங்கள் தடை பெற்றார். அதைத் தொடர்ந்து தற்போது 2019இல் செய்த சூதாட்டப் புகாரை 5 வருடங்கள் கடந்தும் விடாமல் தோண்டி எடுத்து ஆதாரங்களுடன் நிரூபித்துள்ள ஐசிசி விரைவில் அவருக்கான தண்டனையும் பட்டியல் வெளியாகும் என்று கூறியுள்ளது.

இதையும் படிங்க:விராட் கோலி தலைமையில் கில்லியா இருந்த டீம் இப்ப கெட்டு போச்சு, அவங்கள பாத்து கத்துக்கோங்க – ரோஹித்துக்கு கபில் தேவ் அட்வைஸ்

ஒரு காலத்தில் 2 உலக கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக இருந்த வெஸ்ட் இண்டீஸ் தற்போது ஏற்கனவே அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாமல் 2023 உலக கோப்பைக்கு தகுதி பெறாமல் மெகா வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் 2 டி20 உலகக் கோப்பைகளை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய இவர் தற்போது இப்படி மிகப்பெரிய சூதாட்ட புகாரில் மீண்டும் சிக்கியுள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் அதன் ரசிகர்களுக்கும் அவப்பெயரையும் அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement