ஸ்டூவர்ட் பிராடை தொடர்ந்து மேலும் ஒரு பந்துவீச்சாளர் விலகல் – இங்கிலாந்து அணிக்கு ஏற்பட்ட பின்னடைவு

Root
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைய 2-வது போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின் கடைசி நாளில் இந்திய அணி இங்கிலாந்து அணியை அபாரமாக வீழ்த்தி 151 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

indvseng

- Advertisement -

முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணியை 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3வது போட்டி லீட்ஸ் மைதானத்தில் 25ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் இந்த மூன்றாவது போட்டியில் இருந்து இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஒருவர் விலகி இருப்பது அந்த அணிக்கு பெரிய சிக்கலை கொடுத்துள்ளது.

ஏற்கனவே இங்கிலாந்து அணியில் குறிப்பிட்ட வீரர்களைத் தவிர மற்ற யாரும் சோபிக்கவில்லை என்ற விமர்சனம் எழும் நிலையில் தற்போது அந்த வீரரின் விலகல் அந்த அணிக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த தொடரில் இடம் பெற்றிருந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் காயம் காரணமாக இந்திய தொடரில் இருந்து விலகிய நிலையில் தற்போது மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் காயம் காரணமாக மார்க் வுட் விளையாட முடியாது என்று கூறியுள்ளார்.

wood

இவரது விலகல் இங்கிலாந்து அணிக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. மணிக்கு சுமார் 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீச கூடிய மார்க் வுட் அந்த அணியின் சிறப்பான வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தார். இந்நிலையில் அவரது விலகலை தொடர்ந்து பாகிஸ்தான் தொடரின் போது அறிமுகமான சாகிப் முகமத் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி முன்னிலை பெற்று உள்ளதால் மீதமுள்ள போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெறும் என்று பலரும் கூறி வரும் நிலையில் இங்கிலாந்து அணி பெரிய சிக்கலை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement