
இந்திய அணியின் அனுபவ வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இணைந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். தற்போது தங்களது கரியரின் கடைசி கட்டத்தில் இருக்கும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி 2027 ஒருநாள் கோப்பை வரை விளையாடுவார்கள் என்றும் அதன் பின்னர் ஒட்டுமொத்தமாக சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிப்பார்கள் என்றும் தெரிகிறது.
இந்திய அணிக்காக கடந்த பல ஆண்டுகளாக மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வந்த அவர்கள் இருவருமே உலகில் உள்ள முன்னணி பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி பல ஆயிரம் ரன்களை குவித்தவர்கள். அதோடு இந்திய அணியின் பல்வேறு சரித்திர வெற்றிகளுக்கு காரணமான திகழ்ந்த அவர்கள் எந்த நாட்டிலும் ரன் குவிக்க கூடிய வல்லமை படைத்த வீரர்களாக திகழ்ந்தனர்.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மார்க் வுட் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகிய இருவரில் நீங்கள் பந்து வீசுகையில் யார் கடினமான பேட்ஸ்மேன்? என்று உணர்ந்தீர்கள் என்ற கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மார்க் வுட் கூறியதாவது : ரோகித் சர்மாவே நான் பந்து வீசியதில் மிகக் கடினமான பேட்ஸ்மேன் என்று நினைக்கிறேன்.
ஏனெனில் ஷார்ட் பாலுக்கு எதிராக அவர் மிகச் சிறப்பாக செயல்படக்கூடியவர். அவரிடம் ஷார்ட் பால்களை வீசினால் வெகு எளிதாக சிக்ஸர்களை விளாசி விடுவார். அதேபோன்று ஒருமுறை அவரது விக்கெட் எடுக்க தவறிவிட்டால் நிச்சயம் பந்துவீச்சாளர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி அதிரடியாக ரன்களை சேர்ப்பார். எப்பொழுதுமே அவர் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தினால் பெரிய ரன் குவிப்பை நோக்கி நகர்ந்து விடுவார். எனவே அவர்தான் நான் பந்துவீசியதில் கடினமான பேட்ஸ்மேன் என்று நினைக்கிறேன்.
அதே வேளையில் விராட் கோலியும் என்னை அதிகமாக சோதனைக்கு உள்ளாக்கியுள்ளார். ஏனெனில் நம்ப முடியாத பேட்ஸ்மேனான அவர் தன்னுள் மிகச் சிறப்பான பேட்டிங் டெக்னிக்கை வைத்திருப்பவர். டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை அவருக்கு எதிராக நான்காவது, ஐந்தாவது ஸ்டம்பில் பந்து வீசினால் அவரது விக்கெட்டை வீழ்த்தி விடலாம். ஆனால் விராட் கோலியும் செட்டில் ஆகிவிட்டால் நிச்சயம் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒரு பேட்ஸ்மேனாகவே திகழ்ந்துள்ளார் என மார்க் வுட் கூறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இப்படி ஒரு திறமையை அவரிடம் தான் பாக்குறேன்.. யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை புகழ்ந்து தள்ளிய – மொயின் அலி
ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து விட்ட ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் அடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.