இப்படி ஒரு திறமையை அவரிடம் தான் பாக்குறேன்.. யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை புகழ்ந்து தள்ளிய – மொயின் அலி

Moeen Ali
- Advertisement -

இந்திய அணியின் இளம் நட்சத்திர துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த ஐந்து போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்திருந்த வேளையில் அவருக்கு ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திறமை வாய்ந்த அவருக்கு இந்த ஆசிய கோப்பை தொடரில் இடம் கிடைக்காமல் போனது அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

இந்திய வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை பாராட்டிய : மொயின் அலி

அதேவேளையில் டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில்லுக்கு மீண்டும் டி20 போட்டிக்கான இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் இடது கை துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வாலின் திறமையை பாராட்டி தற்போது இங்கிலாந்து அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான மொயின் அலி பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக ஆசிய கோப்பை தொடருக்கு தேர்வாகாத அவரை மொயின் அலி பாராட்டியுள்ள தகவல் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் மொயின் அலி கூறியதாவது : இந்திய அணியை பொறுத்தவரை தற்போதைக்கு நான் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை ஒரு ரன் மிஷின் என்றே கூறுவேன். ஏனெனில் எந்த ஒரு வீக்னஸையும் வெளிக்காட்டாமல் அவர் தொடர்ச்சியாக ரன்களை குவித்து வருகிறார்.

அதிலும் குறிப்பாக எந்த ஒரு மைதானமாக இருந்தாலும் அவரால் ரன்களை குவிக்க முடிகிறது. குறிப்பாக சவால் வாய்ந்த ஆஸ்திரேலியாவில் அவர் மிகச்சிறப்பாக விளையாடியுள்ளார். அதேபோன்று இங்கிலாந்திலும் இம்முறை அற்புதமாக செயல்பட்டார்.

- Advertisement -

அதுதவிர்த்து வெளிநாட்டில் எங்கு போட்டிகள் நடைபெற்றாலும் அங்கு சென்று அந்த சூழலுக்கு ஏற்றவாறு தகவமைத்து மிகச் சிறப்பாக விளையாடுகிறார். அதோடு வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமின்றி சுழற்பந்து வீச்சாளர்களையும் மிகச் சிறப்பாக கையாளுகிறார்.

இதையும் படிங்க : தேங்க்ஸ் புஜ்ஜி.. புஜாரா இல்லனா என்னால அதை ஈஸியா செஞ்சுருக்க முடியாது.. வாழ்த்திய கிங் கோலி

இப்படி எந்த மைதானத்திலும், எந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராகவும் மிகச் சிறப்பாக விளையாடும் அவரிடம் எந்த ஒரு வீக்னசும் பெரியதாக தெரியவில்லை. எனவே அவர் இன்னும் வருங்காலத்தில் மிகப்பெரிய வீரராக மாறுவார் என மொயின் அலி பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement