ஸ்டுவர்ட் பிராடை தொடர்ந்து காயத்தால் வெளியேறவுள்ள நட்சத்திர வீரர் – இங்கி அணிக்கு ஏற்பட்ட சிக்கல்

Root
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கடைசி நாள் ஆட்டம் நடைபெறாத நிலையில் டிராவில் முடிவடைந்தது. முதல் போட்டியில் வெற்றி வாய்ப்பை இழந்த இந்திய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து அணியை 151 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.

indvseng

- Advertisement -

இந்த தொடரின் முதல் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட் காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டி மட்டுமின்றி எஞ்சியுள்ள இந்திய தொடரில் இருந்து வெளியேறினார். அவரது காயம் இங்கிலாந்து அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

ஏனெனில் தற்போது இங்கிலாந்து அணி சார்பாக ஜோ ரூட், ஆண்டர்சன் மற்றும் ராபின்சன் ஆகிய மூவர் தான் ஓரளவுக்கு சிறப்பாக விளையாடுகிறார்கள் என்று தோன்றுகிறது. அந்த அளவிற்கு மற்ற வீரர்கள் இங்கிலாந்து அணியில் சொதப்பி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது பிராடுக்கு அடுத்து அடுத்து முன்னணி வீரரான மார்க் வுட் மூன்றாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம் ஆகியுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

wood

இதுகுறித்து இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் கூறுகையில் : மார்க் வுட்டிற்கு நான்காம் நாள் ஆட்டத்தின்போது காயம் ஏற்பட்டதாகவும் அதனை சமாளித்து அவர் பந்துவீசினார் என்றும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவே அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது குறித்து தற்போது எதுவும் கூற முடியாது என்று கூறியுள்ளார்.

bumrah

ஒருவேளை அவருக்கு காயம் குணமடையவில்லை என்றால் அவரை நிச்சயம் விளையாட வேண்டும் என்று நாங்கள் கட்டாயப்படுத்த மாட்டோம் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே இங்கிலாந்து இருக்கும் நிலையில் தற்போது மார்க் வுட்டும் காயத்தால் அவதிப்பட்டு வருவது அந்த அணிக்கு அடுத்த பின்னடைவை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement