இந்திய அணிக்கு சாதகமாக ஐ.சி.சி எடுத்த இந்த முடிவு அபத்தமானது – மார்க் வாக் காட்டம்

Steve-Waugh
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் மகளிருக்கான டி20 உலக கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இறுதி போட்டிக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் முன்னேறியுள்ளது. இதில் முதல் அரையிறுதி போட்டியின்போது ஆஸ்திரேலியா சிட்னி மைதானத்தில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுவதாக இருந்தது.

Womens

- Advertisement -

ஆனால் மைதானத்தில் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் புள்ளி பட்டியலில் 8 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருந்த இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஏனெனில் அரையிறுதிப் போட்டிக்கு மாற்றுநாள் இல்லை எனவும் முன்னரே அறிவித்து இருந்தது . பொதுவாக இவ்வாறான ஐசிசி தொடர்களில் முக்கியமான போட்டிகளுக்கு மாற்றுநாள் இருக்கும். ஆனால் இந்த போட்டியில் இல்லை என்பதால் இந்திய அணி தகுதி பெற்றது.

இதன் காரணமாக ஐசிசியின் மீது பல முன்னாள் வீரர்கள் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். குறிப்பாக ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மார்க் வாக் ஐசிசியின் இந்த முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறியதாவது : உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு மாற்றுநாள் இல்லை என்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. ஐசிசியின் இந்த முடிவு சற்று ஏமாற்றம் அளிக்கிறது. இந்த போட்டியின் மூலம் பல வீராங்கனைகளின் வாழ்க்கையே மாறும் அளவிற்கு இருந்திருக்கலாம்.

ஆனால் ஐசிசியின் இப்படி ஒரு முடிவு அனைவருக்கும் ஏமாற்றம் அளிக்கிறது என்று மார்க் வாக் கூறியுள்ளார். இந்த போட்டி நடைபெறாமல் போனதால் இங்கிலாந்து அணியின் கேப்டன் தனது ஆதங்கத்தையும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement