டி20 உ.கோ’யில் அசத்தப் போகும் உலகின் டாப் 5 தரமான வீரர்கள் இவர்கள்தான் – மார்க் வாக் வெளியிட்ட பட்டியல் இதோ

Mark Waugh
- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு உலகின் அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. இத்தொடரில் என்னதான் 16 அணிகள் பங்கேற்றாலும் டாப் அணிகளாக திகழும் நடப்பு சாம்பியன், ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து போன்ற அணிகள் தான் கோப்பையை வெல்லக்கூடிய அணிகளாக பார்க்கப்படுகிறது. அந்த அணிகளில் அனைத்து சூழ்நிலைகளிலும் ஏற்படும் சவாலை சிறப்பாக எதிர்கொண்டு வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்கக்கூடிய உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இருப்பதே அந்த கணிப்புகளுக்கு காரணமாகும். அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் அதில் கோப்பையை வெல்லப் போவது யார் அதில் அசத்தப் போகும் வீரர்கள் யார் என்பது போன்ற கணிப்புகளை முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் இணைந்துள்ள முன்னாள் நட்சத்திர ஆஸ்திரேலிய வீரர் மார்க் வாக் தற்சமயத்தில் உலகின் டாப் 5 தரமான வீரர்களை தேர்வு செய்துள்ளார். மேலும் அவர்கள் விரைவில் நடைபெறும் உலக கோப்பையில் நிச்சயம் அசத்துவார்கள் என்ற நம்பிக்கையையும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் ஒவ்வொரு வீரராக அவர் தேர்வு செய்து பேசியது பின்வருமாறு.

- Advertisement -

1. ஜஸ்ப்ரித் பும்ரா: 3 வகையான கிரிக்கெட்டிலும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர முதன்மை வேகப்பந்து வீச்சாளராக திகழும் இவரை தன்னுடைய முதல் தேர்வாக தேர்வு செய்து மார்க் வாக் பேசியது பின்வருமாறு.

“அவர் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அற்புதமாக பந்து வீசக் கூடியவர் என்று நினைக்கிறேன். டி20 கிரிக்கெட்டில் விக்கெட் எடுக்கும் அவரது திறமை வெற்றியின் சாவியாகும். ஆரம்ப கட்ட ஓவர்கள் கடைசி கட்ட ஓவர்கள் என அனைத்து நேரங்களிலும் பந்துவீசும் திறமை அவரிடம் உள்ளது” என்று கூறினார்.

- Advertisement -

2. ஷாஹீன் அப்ரிடி: பாகிஸ்தானின் இளம் நம்பிக்கை நட்சத்திர இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவரை பாராட்டி அவர் பேசியது பின்வருமாறு. “பும்ராவுடன் மற்றொரு புறம் பந்துவீச்சை தொடங்கும் வேகப்பந்து வீச்சாளராக பாகிஸ்தானின் மிகச்சிறந்த சாகின் அப்ரிடியை நான் விரும்புகிறேன்.

அற்புதமான இடது கை வேகப்பந்து வீச்சாளரான அவர் விக்கெட் எடுக்கும் திறமை பெற்றவர். அவரை இதர வீரர்கள் பின்பற்ற நினைப்பார்கள். மேலும் இடது கை பந்துவீச்சாளராக இருக்கும் அவர் வலது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக வேகமாக ஸ்விங் செய்யக்கூடியவர். எனவே அவரை நான் 2வதாக தேர்வு செய்கிறேன்” என்று கூறினார்.

- Advertisement -

3. ரசித் கான்: உலகின் நம்பர் ஒன் டி20 சுழல் பந்து வீச்சாளராக கருதப்படும் இவரை 3வதாக தேர்வு செய்து மார்க் வாக் பேசியது பின்வருமாறு. “உலகின் அனைத்து தொடர்களிலும் விளையாடும் அவர் 4 ஓவர்களை உங்களுக்கு முழுதாக பந்து வீசி கொடுப்பார் என்று நம்பலாம். அதில் 2 – 3 விக்கெட்டுகளை எடுத்து 20 ரன்களை மட்டுமே கொடுப்பார். அதுபோக யாருமே எதிர்பாராத வகையில் கடைசி நேரத்தில் சில பவுண்டரிகளை சரவெடியாக அடிக்கும் திறமையும் பெற்றுள்ளார்” என்று கூறினார்.

4. ஜோஸ் பட்லர்: ஐபிஎல் 2022 தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்று இங்கிலாந்தின் கேப்டனாக முன்னேறியுள்ள இவரை தேர்வு செய்து அவர் பேசியது பின்வருமாறு. “தற்சமயத்தில் டி20 கிரிக்கெட்டில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக அவர் திகழ்கிறார் என்று நினைக்கிறேன். அவர் பந்துகளை தெளிவாக அடிக்கும் திறமை பெற்றுள்ளவர். அனைத்து தொடர்களிலும் அவரை பார்க்கும் போது இதர வீரர்களை விட அவர் சிறப்பாக விளையாடுகிறார்” என்று கூறினார்.

5. கிளன் மேக்ஸ்வெல்: நடப்பு சாம்பியனாக உலகக் கோப்பையை தக்க வைக்க சொந்த மண்ணில் களமிறங்கும் ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திர சுழல் பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக திகழும் இவரை தேர்வு செய்து மார்க் வாக் பேசியது பின்வருமாறு. “பில்டிங்கில் துடிப்பாகவும் பேட்டிங்கில் அதிரடியாகவும் செயல்படக்கூடிய கிளன் மேக்ஸ்வெல் உங்களுக்கு போட்டிகளை வென்று கொடுப்பார்”

“அதிலும் அவர் 30 பந்துகளை எதிர்கொண்டால் நிச்சயம் போட்டியை உங்களுக்கு வென்று கொடுப்பார் என்று நினைக்கிறேன். இருப்பினும் அவர் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட மாட்டார் என்று அனைவரும் நினைக்கிறார்கள். ஆனால் துருப்புச்சீட்டு வீரராக செயல்படும் திறமை பெற்றுள்ள அவர் உங்களுடைய நாளில் வெற்றியைப் பெற்றுக் கொடுப்பார்” என்று கூறினார்.

Advertisement