உலகிலேயே இங்கிலாந்து தான் மாஸ் டெஸ்ட் டீம் – தனக்குத்தானே புகழ்ந்து கொண்ட மைக்கல் வாகனை நோஸ் கட் செய்த மார்க் வாக்

Mark Waugh Micheal Vaughan
- Advertisement -

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அங்கு அந்த அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. பிப்ரவரி 16ஆம் தேதியன்று மவுண்ட் மவுங்கனி நகரில் பகலிரவு போட்டியாக இளஞ்சிவப்பு நிற பந்தில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து தங்களது வழக்கமான அதிரடி அணுகு முறையை பின்பற்றி விரைவாக ரன்களை சேர்த்தது. குறிப்பாக 58.2 ஓவரில் 325/9 ரன்கள் குவித்த அந்த அணி முதல் நாள் இரவு நேரத்தில் விக்கெட்டுகளை எடுக்கலாம் என்ற எண்ணத்துடன் திடீரென்று டின்னருக்கு பின் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக பென் டூக்கெட் 84 (68) ரன்களும் ஹரி ப்ரூக் 89 (81) ரன்களும் அதிரடியாக எடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக நெய்ல் வேக்னர் 4 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து எதிர்பார்த்தது போலவே டாம் லாதம் 1, கேன் வில்லியம்சன் 6, ஹென்றி நிக்கோலஸ் 4 என முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை ஆரம்பத்திலேயே இழந்து முதல் நாள் முடிவில் 37/3 என தடுமாறி வருகிறது. களத்தில் கான்வே 17*, நெய்ல் வாக்னர் 4* ரன்களும் இருக்கும் நிலையில் இங்கிலாந்து சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

- Advertisement -

நோஸ் கட் செய்த மார்க் வாக்:
முன்னதாக கடந்த வருடம் புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பென் ஸ்டோக்ஸ் – பிரண்டன் மெக்கல்லம் தலைமையில் என்ன ஆனாலும் அதிரடியாக விளையாடுவோம் என்ற அணுகு முறையுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்து இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளை பந்தாடி கடைசி 10 போட்டிகளில் 9 வெற்றிகளை பதிவு செய்து மிரட்டி வருகிறது. குறிப்பாக ட்ரா என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் அடித்து நொறுக்கும் செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் அந்த அணி இப்போட்டியில் கூட யாருமே எதிர்பாராத வகையில் முதல் நாளிலேயே டிக்ளர் செய்வதாக அறிவித்து ஆச்சரியமளித்துள்ளது.

மொத்தத்தில் அந்த அணியின் அதிரடி அணுகுமுறையால் பெரும்பாலான சமயங்களில் நினைத்துப் பார்க்க முடியாத வெற்றி கிடைத்து வருகிறது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தி டெஸ்ட் போட்டிகளில் எப்படி விளையாட வேண்டும் என்பதை உலகிற்கே கற்றுக் கொடுக்கும் அணியாக இங்கிலாந்து செயல்படுவதாக கடந்த ஒரு வருடமாகவே அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் பெருமை பேசி வருகிறார்கள்.

- Advertisement -

அந்த வகையில் நியூசிலாந்துக்கு எதிரான இப்போட்டியின் முதல் நாள் ஆட்டத்தை பார்த்த முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் உலகிலேயே இங்கிலாந்து தான் பார்ப்பதற்கு மிகவும் சிறந்த டெஸ்ட் அணியாக செயல்பட்டு வருவதாக தனது ட்வீட்டரில் பாராட்டியுள்ளார். ஆனால் அதைப் பார்த்த முன்னால் ஆஸ்திரேலிய வீரர் மார்க் வாக் “கண்டிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்குப் பின் டாப் 3 இடங்களில் இங்கிலாந்து இருக்கும் வாகன்” என்று அவருக்கு பதிலளித்து கலாய்த்துள்ளார்.

அதாவது என்னதான் அதிரடியான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வெற்றிகளை பெற்றாலும் டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் இப்போதும் இங்கிலாந்து 3வது இடத்தில் தான் இருக்கிறது. மறுபுறம் முதல் இடத்திற்கு ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளிடம் தற்சமயத்தில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் கடுமையான போட்டி நிலவுகிறது. அத்துடன் என்ன தான் தொடர் வெற்றிகள் பெற்றாலும் வரும் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பை ஏற்கனவே இங்கிலாந்து 99% இழந்து விட்டது.

இதையும் படிங்க:மேட்ச் ஆரம்பிச்ச 2 மணி நேரத்துலயே கும்ப்ளேவின் சாதனையை நெருங்கிய அஷ்வின் – ஈவ்னிங் ரெக்கார்டு கன்பார்ம்

மறுபுறம் இங்கிலாந்து மண்ணில் நடைபெறப் போகும் பைனலில் ஆஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகள் மோதுவது 99% உறுதியாகியுள்ளது. மொத்தத்தில் தரவரிசையிலும் டாப் இடத்தை பிடிக்காமல் சொந்த மண்ணில் நடைபெறப் போகும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலக கோப்பை பைனலுக்கும் தகுதி பெற பெறாத இங்கிலாந்து நிச்சயமாக ஆஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகளுக்கு அடுத்தபடியாக 3வது சிறந்த டெஸ்ட் அணி தானே தவிர முதல் அணி கிடையாது என்று மைக்கேல் வாகனுக்கு மார்க் வாக் சிரித்துக் கொண்டே தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement