IND vs AUS இதெல்லாம் 1998ல இருந்தே இந்தியாவில் நடக்குது, பிட்ச் பற்றி புதிய சர்ச்சையுடன் கிளம்பிய முன்னாள் ஆஸி வீரர்

mark Taylor
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளில் அடுத்தடுத்த படுதோல்விகளை சந்தித்து ஆரம்பத்திலேயே கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டுள்ளது. வரும் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்து விட்ட அந்த அணி 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் தங்களை சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியாவை இம்முறை அவர்களது சொந்த மண்ணில் சாய்த்து 2004க்குப்பின் தொடரை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியது. அதை விட பொதுவாகவே ஸ்லெட்ஜிங் செய்து வெற்றி பெறுவதில் கில்லாடியான ஆஸ்திரேலியா இத்தொடருக்கு முன்பாக பிட்ச் பற்றி கடுமையாக விமர்சித்தது.

Steve Smith Harsha Bhogle

- Advertisement -

குறிப்பாக 2017 இந்திய சுற்றுப்பயணத்தில் பயிற்சி போட்டிகளில் பச்சை புற்களுடன் கூடிய பிட்ச் கொடுக்கப்பட்டதாகவும் ஆனால் முதன்மை போட்டிகளில் சுழலுக்கு சாதகமான பிட்ச் இருந்ததால் இம்முறை இந்தியாவிடம் நியாயத்தையும் நம்பிக்கையும் எதிர்பார்க்கவில்லை என்று ஸ்டீவ் ஸ்மித், இயன் ஹீலி போன்ற முன்னாள் இந்நாள் ஆஸ்திரேலிய வீரர்கள் விமர்சித்தனர். அத்துடன் தங்களது இடது கை பேட்ஸ்மேன்களை தாக்குவதற்காக வேண்டுமென்றே ஒரு புறத்தில் காய்ந்த தன்மையுடன் நாக்பூர் பிட்ச் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் விமர்சித்தனர்.

மீண்டும் விமர்சனம்:
ஆனால் நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் வாயில் பேசியதை செயலில் காட்டத் தவறிய அந்த அணி 177, 91 ரன்களுக்கு படுமோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி அடுத்தடுத்து ஆல் அவுட்டானது. மறுபுறம் அதே பிட்ச்சில் 400 ரன்கள் அடித்த இந்தியா ஆஸ்திரேலியாவின் குற்றச்சாட்டுகளை பொய்யாக்கி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. அதை விட டெல்லியில் நடைபெற்ற 2வது போட்டியில் சுழலாமல் நேராக வந்த பந்துகளை கூட சரியாக அடிக்க தேவையான டெக்னிக் தெரியாமல் திணறிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ஸ்வீப் ஷாட் அடித்து களீன் போல்ட்டாகி தோல்விக்கு காரணமானவர்கள்.

அதனால் பிட்ச் மீது எந்த குறையுமில்லை என்பதை உணர்ந்த முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களது பேட்ஸ்மேன்களுக்கு தான் தரமான சுழல் பந்து வீச்சை எதிர்கொள்ள தெரியவில்லை என்று விமர்சித்து வருகிறார்கள். அப்படி பிட்ச் பற்றிய குற்றச்சாட்டுகள் ஓய்ந்துள்ள நிலையில் இந்தியா எப்போதும் அவர்களுடைய ஸ்பின்னர்களுக்கு சாதகமான பிட்ச்சை உருவாக்குவது புதிதல்ல என்று முன்னாள் வீரர் மார்க் டெய்லர் புதிய விமர்சனத்தை வைத்துள்ளார்.

- Advertisement -

குறிப்பாக 1998 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் தாம் விளையாடியதிலிருந்தே இது தொடர்வதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “ஆம் ஆஸ்திரேலியாவில் இருக்கும் கால சூழ்நிலைகள் மாறுபட்டது. மேலும் இப்போதுள்ள ஆஸ்திரேலிய அணியினர் ஐபிஎல் தொடரில் கிடைத்த அனுபவத்தை வைத்து இந்தியாவுக்கு செல்கிறார்கள்”

Mark-Taylor

“ஆனால் இந்தியாவில் உள்ள பிட்ச்கள் மிகவும் தனித்துவமானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தியர்கள் அவர்களுக்கு தகுந்தார் போல் மெதுவாக சுழலும் பிட்ச்களை அமைக்கிறார்கள். பொதுவாக அது போன்ற சூழ்நிலைகளில் நாங்கள் விளையாடுவதில்லை. எனவே ஆக்ரோஷமாக செயல்பட வேண்டும் என்ற அணுகுமுறையுடன் நாங்கள் அங்கு சென்றது மோசமானதல்ல. இருப்பினும் அதற்கான டெக்னிக் உங்களிடம் இருக்க வேண்டும். குறிப்பாக 2வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் திட்ட செயல்படுத்தல் முறை மோசமாக இருந்தது”

- Advertisement -

“நான் இந்தியாவில் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதில்லை. 1998ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஒரு நல்ல போட்டியில் நாங்கள் இந்தியாவால் தோற்கடிக்க பட்டோம். ஆனால் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற அடுத்த போட்டியில் அடித்து நொறுக்கப்பட்டோம். எனவே தற்போது ஆஸ்திரேலிய அணியினர் சந்தித்ததுள்ள நிலைமை ஒன்றும் புதிதல்ல. வரலாற்றில் இது போன்ற நிலைமையை நாம் சந்தித்துள்ளோம். குறிப்பாக கொல்கத்தாவில் இன்னிங்ஸ் மற்றும் 220 ரன்கள் வித்தியாசத்தில் நாங்கள் தோற்றது வேடிக்கையானதல்ல”

இதையும் படிங்க:6 வயது ரசிகருக்காக ரிஷப் பண்ட் செய்த செயல். ஆசையை நிறைவேற்றி – அவரே பகிர்ந்த பதிவு

“அது தான் தற்போது நடைபெறுகிறது. இங்குள்ள சூழ்நிலைகளில் 3 நாட்களில் ஆஸ்திரேலியா தோற்றதை போல் போட்டி வேகமாக செல்லும். அதை உங்களால் தடுத்து நிறுத்த முடியாது. இருப்பினும் 1998இல் பெங்களூருவில் நடைபெற்ற முதல் போட்டியில் நல்ல பிட்ச்சில் நாங்கள் வென்றோம். அதுபோல ஆஸ்திரேலியா வெல்வதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் அது மிகவும் கடினமாகும்” என்று கூறினார்.

Advertisement