- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஹெட் சண்டையை விடுங்க.. இப்படி ஓடுவதற்காகவே சிராஜுக்கு ஐசிசி தண்டனை கொடுக்கனும்.. கிளார்க் விளாசல்

ஆஸ்திரேலியா – இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை விறுவிறுப்பான துவக்கத்தை பெற்றுள்ளது. அதில் முதல் போட்டியில் வென்ற இந்தியாவை இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது. முன்னதாக அத்தொடரின் இரண்டாவது போட்டியில் 140 ரன்கள் விளாசி இந்தியாவின் வெற்றியைப் பறித்த டிராவிஸ் ஹெட் விக்கெட்டை எடுத்த முகமது சிராஜ் வெளியே செல்லுங்கள் என்ற வகையில் கோபத்துடன் வழியனுப்பினார்.

அதற்கு டிராவிஸ் ஹெட் சில வார்த்தைகள் சொல்லிக் கொண்டே கோபமாக வெளியேறினார். மறுபுறம் தங்களுடைய உள்ளூர் ஹீரோவை அப்படி அனுப்பிய சிராஜுக்கு எதிராக அடிலெய்ட் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்காக சிராஜுக்கு ஐசிசி தண்டனை வழங்க வேண்டும் என்று சில முன்னாள் ஆஸ்திரேலியா வீரர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

- Advertisement -

சிராஜ் சேட்டை:

முன்னதாக அதே போட்டியில் எல்பிடபுள்யூ முறையில் விக்கெட்டுகள் கிடைப்பது போல் இருக்கும் நேரங்களில் சிராஜ் நடுவரிடம் திரும்பி அவுட் கொடுக்குமாறு கேட்கவில்லை. மாறாக உறுதியாக அது அவுட் தான் என்று தமக்குத் தாமே முடிவு செய்து கொண்ட அவர் விக்கெட் கிடைத்ததாக நினைத்து கொண்டாடினார். பின்னர் அது அவுட்டில்லை என்று நடுவர் அறிவித்தார். இந்நிலையில் சிராஜின் இந்த பழக்கத்திற்கு ஐசிசி தண்டனை கொடுக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “எல்பிடபுள்யூ விக்கெட்டுக்கு தேவையின்றி அதிகமாக அப்பீல் செய்வதற்கும் நடுவரிடம் கேட்காமல் கொண்டாடுவதற்கும் சிராஜுக்கு அபராதம் விதிக்க வேண்டும். ஏனெனில் பேட்ஸ்மேனின் காலில் பந்தை அடிக்கும் அவர் விக்கெட் கிடைத்ததாக நினைத்து ஓடுகிறார். இதுவரை அதற்காக அவருக்கு ஐசிசி அபராதம் விதிக்காதது எனக்கு ஆச்சரியம்”

- Advertisement -

கோலி, ரோஹித் சொல்லணும்:

“நான் விளையாடிய காலங்களில் அப்படி செய்தால் ஒவ்வொரு முறையும் அபராதம் விதிப்பார்கள். நீங்கள் அவ்வாறு அவுட் கேட்பது பரவாயில்லை. ஆனால் நடுவரிடம் நீங்கள் கேட்காமலேயே கொண்டாடுவது சரியில்லை” என்று கூறினார். அதே நிகழ்ச்சியில் மார்க் டெய்லர் தெரிவித்தது பின்வருமாறு. “ரோஹித் சர்மா அல்லது விராட் கோலி போன்றவர்கள் முகமது சிராஜிடம் அறிவுரை சொல்வதை நான் பார்க்க விரும்புகிறேன்”

இதையும் படிங்க: இந்தியாவை காப்பாத்தனும்ன்னா சச்சினோட 241 பாத்து கத்துகிட்டு வாங்க.. கோலிக்கு கில்கிறிஸ்ட் அட்வைஸ்

“ஏனெனில் அது விளையாட்டையும் நடுவரையும் அவமதிக்கும் செயலாகும். பேட்ஸ்மேனின் காலில் பந்து அடிக்கும் போது அது எல்பிடபுள்யூ என்று நினைத்துக் கொண்டு அவர் விக்கெட் கீப்பர் வரை ஓடிச் சென்று கொண்டாடுகிறார். பின்னர் நடுவரை பார்த்து விட்டு நிறுத்துகிறார்” என்று கூறினார். இப்படி தேவையின்றி நடந்து கொள்வதால் சிராஜ் அபராதத்தை சந்திக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -