இந்தியாவை காப்பாத்தனும்ன்னா சச்சினோட 241 பாத்து கத்துகிட்டு வாங்க.. கோலிக்கு கில்கிறிஸ்ட் அட்வைஸ்

Adam Gilchrist
- Advertisement -

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் போட்டியில் பும்ரா தலைமையில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆனால் ரோஹித் சர்மா தலைமையில் 2வது போட்டியில் சுமாராக விளையாடிய இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது. அதனால் 1 – 1* (5) என்ற கணக்கில் சமனில் இருக்கும் இத்தொடரை வெல்ல அடுத்த போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சமீபத்திய நியூசிலாந்து தொடர் உட்பட டெஸ்ட் கிரிக்கெட்டில் சுமாராக விளையாடி வந்தார். அதனால் விமர்சனங்களை சந்தித்த அவர் இத்தொடரின் முதல் போட்டியில் சதத்தை அடித்து ஃபார்முக்கு திரும்பினார். அதனால் தொடர்ந்து அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி இரண்டாவது போட்டியில் மீண்டும் சுமாராக விளையாடி தோல்விக்கு காரணமாக அமைந்தார்.

- Advertisement -

சச்சின் போல:

குறிப்பாக அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசும் பந்துகளில் அவர் தொடர்ச்சியாக அவுட்டாகி வருகிறார். இந்நிலையில் அதை தவிர்க்க 2004 சிட்னி போட்டியில் சச்சின் 241* ரன்கள் குவித்த ஆட்டத்தை பார்த்து விராட் கோலி கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் ஆலோசனை தெரிவித்துள்ளார். இப்போதைய விராட் கோலி போல அந்தத் தொடரில் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் சச்சின் தொடர்ந்து அவுட்டானார்.

அதனால் தமக்கு மிகவும் பிடித்த கவர் டிரைவ் அடிக்காமலேயே வைராக்கியத்துடன் விளையாடிய சச்சின் ஆஸ்திரேலியாவை தெறிக்க விட்டு 241* ரன்கள் குவித்தார். எனவே இப்போது இந்தியாவை காப்பாற்ற விராட் கோலி அதே போன்ற ஆட்டத்தை கையில் எடுக்க வேண்டுமென்று கில்கிறிஸ்ட் கூறியுள்ளார். இது பற்றி பேசியது பின்வருமாறு”

- Advertisement -

கில்கிறிஸ்ட் ஆலோசனை:

“சில நேரங்களில் எதிரணி பவுலர் அல்லது திறனுக்கு எதிராக போராடுவதை விட உங்களுடைய காதுகளுக்கு இடையே போராடுவதே பெரிய போட்டியாக இருக்கும். விராட் எந்த உணர்வையும் துரத்த பரிந்துரைக்கவில்லை. ஆனால் சிட்னியில் சச்சின் செய்ததை அவர் முயற்சிக்க வேண்டும். அதற்காக அவர் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப்பில் வரும் பந்துகளை நாம் துரத்த போவதில்லை. நீ என்னிடம் வா, பொறுமையாக விளையாடு என்ற வகையில் பேட்டிங் செய்ய வேண்டும்”

இதையும் படிங்க: முகமது சிராஜ் மற்றும் டிராவிஸ் ஹெட் விகாரத்தில் ஐ.சி.சி எடுக்கவிருக்கும் நடவடிக்கை – விவரம் இதோ

“அதை மனதளவில் செய்வதற்கான அனுபவம் அவரிடம் இருக்கிறது. அவர் அண்டர்-19, ஐபிஎல் அளவில் இருந்த எதிர்பார்ப்புகளை தாண்டி தான் தற்போது நட்சத்திரமாக வந்துள்ளார். அதனால் என்னுடைய அணிக்காக பொறுமையுடன் விளையாட வேண்டிய நிலை வந்துள்ளது என்று அவர் தமக்குத் தாமே சொல்லிக் கொள்ள வேண்டும். அப்படி நீண்ட நேரம் விராட் கோலி விளையாடினால் அசத்துவதற்கான வாய்ப்பு உருவாகும்” என்று கூறினார்.

Advertisement