முகமது சிராஜ் மற்றும் டிராவிஸ் ஹெட் விகாரத்தில் ஐ.சி.சி எடுக்கவிருக்கும் நடவடிக்கை – விவரம் இதோ

Siraj-and-Head
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற முடிந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான டிராவிஸ் ஹெட் ஆகியோருக்கு இடையே கடுமையான மோதல் எழுந்தது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்திருந்தது.

ஐ.சி.சி எடுக்கப்போகும் நடவடிக்கை :

மைதானத்தில் அவர்கள் இருவருமே சற்று ஆக்ரோஷமாக வார்த்தை முதலில் ஈடுபட்டனர். இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் 141 பந்துகளில் 140 ரன்கள் குவித்து அந்த அணியின் ரன் குவிப்பிற்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

- Advertisement -

இந்நிலையில் அவரை 140 ரன்களில் கிளீன் போல்ட் மூலம் வெளியேற்றிய முகமது சிராஜ் அவரது விக்கெட் வீழ்ந்ததை சற்று ஆக்ரோஷமாக கொண்டாடினார். அதை பார்த்த டிராவிஸ் ஹெட் அவரை நோக்கி ஏதோ சில வார்த்தைகளை கூற மீண்டும் பதிலுக்கு முகமது சிராஜும் சில வார்த்தைகளை உதித்திருந்தார்.

இப்படியாக இருவருமே ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டனர். ஆனால் அன்றைய நாளின் முடிவில் டிராவிஸ் ஹெட் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறும் போது : நான் முகமது சிராஜிடம் நன்றாக பந்து வீசினார் என்று தான் சொன்னேன். ஆனால் அவர்தான் என்னை மோசமான வார்த்தைகளை திட்டியதாக கூறினார்.

- Advertisement -

இதற்கு பதில் அளித்த சிராஜ் கூறுகையில் : டிராவிஸ் ஹெட் பொய் சொல்கிறார் அவர் என்னை திட்டியதால் தான் நான் மீண்டும் அவரிடம் ஆக்ரோஷமாக நடந்து கொண்டேன் என்று தெரிவித்திருந்தார். இப்படி இருவருமே தங்களது இந்த போதல் குறித்து கருத்துக்களை தெரிவித்து இருந்தனர்.

இதையும் படிங்க : 6 – 7 மாசத்துல ஓடிருவான்னு என்னை சொன்னாங்க.. யாருமே கோச்சிங் தராம வளர்ந்தது இப்படி தான்.. பும்ரா பேட்டி

இவ்வேளையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி இது போன்ற சர்வதேச போட்டிகளில் வீரர்கள் அநாகரிகமாக நடந்து கொள்வதை தவிர்ப்பதற்காக அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகவும், அதனால் தகுதி குறைப்பு புள்ளிகளை அவர்கள் இருவருக்கும் வழங்க இருப்பதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement