அவ்வளவு மெத்தனமா? டெஸ்ட் தொடரில் செஞ்சு விடப்போறாங்க.. முன்னாள் இங்கிலாந்து வீரர் விமர்சனம்

Mark Butcher 2
- Advertisement -

விரைவில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அங்கு 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக இந்த தொடர் நடைபெறுகிறது. முன்னதாக கடைசியாக கடந்த 2012ஆம் ஆண்டு இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்து இங்கிலாந்து சாதனை படைத்தது.

ஆனால் அதன் பின் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் கடந்த 12 வருடங்களாக சொந்த மண்ணில் ஒரு தொடரில் கூட தோற்காமல் இருக்கும் இந்தியா தொடர்ந்து வெற்றி நடை போட்டு வருகிறது. எனவே அப்படிப்பட்ட வலுவான இந்தியாவை இம்முறை பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அதிரடியாக விளையாடி வீழ்த்துமா என்ற எதிர்பார்ப்பு அந்நாட்டு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

- Advertisement -

இங்கிலாந்தின் மெத்தனம்:
இருப்பினும் இந்த பெரிய தொடருக்கு முன்பாக இங்கிலாந்து அணியினர் இந்தியாவில் எந்த பயிற்சி போட்டியிலும் விளையாடாமல் நேரடியாக களமிறங்க உள்ளனர். குறிப்பாக துபாயில் தற்போதுள்ள இங்கிலாந்து அணியினர் அங்கு பயிற்சி முகாமில் ஈடுபட்டு இந்த டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் வெற்றி பெறுவதற்கு முன்கூட்டியே பயணித்து பயிற்சி போட்டிகளில் விளையாடாமல் இங்கிலாந்து அணியினர் தவறு செய்துள்ளதாக முன்னாள் மார்க் பட்சர் விமர்சித்துள்ளார்.

எனவே இத்தொடரில் இங்கிலாந்து அணியை இந்தியா அடிக்கும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி விஸ்டனில் பேசியது பின்வருமாறு. “நான் தற்போது விளையாடினால் இந்த நிலைமையை நினைத்து கவலையடைவேன். ஏனெனில் தற்போதுள்ள வீரர்களில் பலர் கடந்த ஜூலை மாதத்துக்கு பின் பெரியயளவில் கிரிக்கெட்டில் விளையாடவில்லை. சிலர் மட்டுமே கடந்த செப்டம்பரில் முடிந்த கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடினார்கள்”

- Advertisement -

“அதன் பின் பயிற்சி செய்வதற்கு 3 மாதங்கள் இருந்தது. கடந்த ஆஷஸ் தொடருக்கு முன்பாக இங்கிலாந்து அணி இதே போல செய்தது. அதனால் ஆரம்பத்திலேயே அவர்கள் 2 – 0 கணக்கில் பின்தங்கினார்கள். இந்த சமயத்தில் இங்கிலாந்து அனுபவத்தில் குறைந்திருக்கிறது அல்லது சுழல் பந்து வீச்சில் தடுமாறும் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நீங்கள் கம்பேக் கொடுத்ததைப் போல் சொந்த மண்ணில் தோற்காமல் இருக்கும் இந்தியாவுக்கு எதிராக செய்வது கடினமாகும்”

இதையும் படிங்க: இதுல கூடவா இடமில்ல.. அப்படி ரோஹித் மேல என்ன வன்மம்? மும்பையை விளாசும் ரசிகர்கள்

“பென் ஸ்டோக்ஸ் தலைமையில் அதிரடியாக விளையாடுவதை நினைத்து அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். இருப்பினும் இந்தியாவில் நம்மால் 5 டெஸ்ட் போட்டிகளை வெல்வது சாத்தியமில்லை என்ற எண்ணத்துடன் அவர்கள் செல்கின்றனர். ஆனால் இந்தியாவில் வெற்றி பெறுவதற்கு தேவையான அளவுக்கு தயாராகாமல் நீங்கு அங்கே சென்று அடிபட்டு போனால் ரசிகர்கள் மென்மையாக நடந்து கொள்ள மாட்டார்கள். அது ஒரு வகையில் மன்னிக்க முடியாதது” என்று கூறினார்.

Advertisement