- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சொதப்பியதை நம்ப முடியல.. ஜடேஜாவிடம் இந்த டெக்னிக்கை ரிஷப் பண்ட் ஆச்சும் சொல்லனும்.. மார்க் பட்சர்

இங்கிலாந்து மண்ணில் இந்தியா கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் டிராபியில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் அப்போட்டியில் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியா 5 சதங்கள் அடித்து சாதனை படைத்தது. ஆனால் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்கவில்லை.

ஃபீல்டிங் துறையில் 7 கேட்ச்களை கோட்டை விட்ட இந்தியாவுக்கு பும்ராவை தவிர்த்து மற்ற பவுலர்கள் கை கொடுக்கவில்லை. அதனால் ஒரு டெஸ்ட் போட்டியில் 5 சதங்களை அடித்தும் தோற்ற முதல் அணி என்ற மோசமான உலக சாதனையை இந்தியா படைத்தது. முன்னதாக லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் கடைசி நாளில் ரவீந்திர ஜடேஜா தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

நம்ப முடியாத சொதப்பல்:

குறிப்பாக முதல் 4 நாட்களில் பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் ஓடியதால் ஏற்பட்ட காலடி தடங்கள் (ரஃப்) பிட்ச்சில் சிதைவை ஏற்படுத்தின. அந்த இடங்களில் பந்தை பிட்ச் செய்தாலே சில நேரங்களில் கணிக்க முடியாத அளவுக்கு சுழன்று பேட்ஸ்மேன்களை ஏமாற்றி விக்கெட்டை பெற்றுக் கொடுக்கும். ஆனால் அந்த டெக்னிக்கை அதிகம் பின்பற்றாத ஜடேஜா 1 விக்கெட் மட்டுமே எடுத்தது இந்தியாவின் வெற்றிக்கு உதவவில்லை.

இந்நிலையில் முதல் போட்டியில் ரவீந்திர ஜடேஜா சொதப்பலாக பந்து வீசியதை தம்மால் நம்ப முடியவில்லை என முன்னாள் இங்கிலாந்து வீரர் மார்க் பட்சர் தெரிவித்துள்ளார். அடுத்து வரும் போட்டிகளில் அந்த டெக்னிக்கை ஜடேஜா பயன்படுத்த வேண்டும் அல்லது விக்கெட் கீப்பர் ரிஷப் ஃபண்ட் அவரிடம் சொல்ல வேண்டும் என்றும் மார்க் பட்சர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி விஸ்டன் யூடியூப் சேனலில் பட்சர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

ரிஷப் பண்ட் சொல்லனும்:

“உண்மையில் ஜடேஜா எப்படி இவ்வளவு மோசமாக பந்து வீசினார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அது உங்களுடைய கையில் சுத்தியல் இருந்தும், உங்களின் கைமுட்டிகளால் அடிப்பதைப் போல இருந்தது. ஏனெனில் ரஃப் மேலே நீங்கள் சரியான நேரத்தில் பந்தை போடவில்லை. மிகவும் தாமதமாக போட்டீர்கள். அது மிகவும் மோசமான பந்து வீச்சு”

இதையும் படிங்க: பிறந்த குழந்தையை விட நாடு தான் முக்கியம்.. கே.எல் ராகுல் எடுத்த அந்த முடிவு கிரேட் – ஹேமங் பதானி நெகிழ்ச்சி

“இத்தனைக்கும் ஜடேஜா உலகில் மிகப்பெரிய அனுபவத்தைக் கொண்டவர். இருப்பினும் அது அவருக்கு கிளிக் ஆகவில்லை என்பது போல் இருந்தது அல்லது விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ரஃப் மேலே பவுலிங் செய்யாமல் இருப்பதை சொல்லாமல் இருந்திருக்கலாம்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி ஜூலை இரண்டாம் தேதி பர்மிங்கம் நகரில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -