பிறந்த குழந்தையை விட நாடு தான் முக்கியம்.. கே.எல் ராகுல் எடுத்த அந்த முடிவு கிரேட் – ஹேமங் பதானி நெகிழ்ச்சி

Badani and Rahul
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர அனுபவ வீரரான கே.எல் ராகுல் இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐ.பி.எல் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இடம் பிடித்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதனை தொடர்ந்து தற்போது சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய டெஸ்ட் அணியிலும் முதன்மை வீரராக இடம் பிடித்து இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

கே.எல் ராகுல் எடுத்த முடிவு பாராட்ட வேண்டிய ஒன்று : ஹேமங் பதானி

அண்மையில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்த அவர் அடுத்து வரும் நான்கு போட்டிகளிலும் அற்புதமான பார்மை தொடர்வார் என்று அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக கே.எல் ராகுல் தயாரான விதம் குறித்து டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளரான ஹேமங் பதானி பாராட்டினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்த இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக முன்கூட்டியே இங்கிலாந்து செல்ல விரும்புகிறேன் என பி.சி.சி.ஐ-யிடம் கே.எல் ராகுல் கூறியது மிக சிறப்பான ஒரு விடயம்.

ஏனெனில் அவருக்கு இப்போதுதான் குழந்தை பிறந்திருக்கிறது. எனவே அவர் நினைத்திருந்தால் குழந்தையுடன் நேரத்தை செலவிட்டு இருக்கலாம். பிசிசிஐ அவருக்கான அனுமதியை கொடுத்தும் அதை ஏற்றுக்கொள்ளாமல் தாமாக முன்வந்து இந்திய ஏ அணியுடன் இணைந்து பயிற்சி போட்டியில் விளையாடினார். அதேபோன்று இங்கிலாந்து தொடருக்கு நாட்கள் இருந்தும் முன்கூட்டியே இங்கிலாந்து செல்லப்போகிறேன் என்று அறிவித்து அங்கு சென்று சதம் அடித்தது எல்லாம் பாராட்ட வேண்டிய ஒரு விடயம்.

- Advertisement -

சமீபத்தில் தான் அவருக்கு குழந்தை பிறக்கிறது என்பதனால் உடனடியாக அந்த குழந்தையை இங்கிலாந்து அழைத்துச் செல்ல முடியாது. அந்த குழந்தையை விட நாடு பெரியது என்று அவர் எடுத்த முடிவு என்னை வியக்க வைக்கிறது. தற்போதைய இந்திய அணியில் மூத்த வீரராக இருக்கும் அவர் நினைத்திருந்தால் நேரடியாக போட்டி துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன் இங்கிலாந்து சென்று இந்திய அணியுடன் இணைந்து விளையாடி இருக்கலாம்.

இதையும் படிங்க : 4 ஆண்டுகளுக்கு பிறகு கம்பேக் கொடுத்த ஸ்டார் பிளேயர்.. மேலும் வலிமையான இங்கிலாந்து – இந்தியா தாக்குப்பிடிக்குமா?

ஆனால் தன்னுடைய பேட்டிங் பார்மை சீராக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து முன்கூட்டியே இங்கிலாந்து சென்று பயிற்சி போட்டியிலும் விளையாடி தனது பொறுப்பை அவர் உணர்ந்து அதை நிரூபித்தும் காட்டியிருக்கிறார் என ஹேமங் பதானி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement