4 ஆண்டுகளுக்கு பிறகு கம்பேக் கொடுத்த ஸ்டார் பிளேயர்.. மேலும் வலிமையான இங்கிலாந்து – இந்தியா தாக்குப்பிடிக்குமா?

Archer
- Advertisement -

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தங்களது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிராக பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில் லீட்ஸ் நகரில் நடைபெற்ற முதலாவது போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது.

இங்கிலாந்து அணியில் இணைந்த நட்சத்திர வீரர் :

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி தற்போதைய நிலையில் இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது வரும் ஜூலை 2-ஆம் தேதி எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இதன் காரணமாக தற்போது இங்கிலாந்து அணி வீரர்கள் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகிறது. அதேவேளையில் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது மீண்டும் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இங்கிலாந்து அணியை வீழ்த்த மும்முரமாக தயாராகி வருகிறது.

இதன் காரணமாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆஃர்ச்சர் மீண்டும் இணைந்துள்ளார். அவரது வருகை அந்த அணிக்கும் மேலும் பலத்தை சேர்த்துள்ளது.

- Advertisement -

கடைசியாக 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஆர்ச்சர் அதன்பிறகு காயம் காரணமாக நான்கு ஆண்டுகளாக இடம் பெறாமல் இருந்து வந்த வேளையில் தற்போது அவர் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளார். ஏற்கனவே தற்போது சொந்த மண்ணில் மிக பலமான அணியாக திகழ்ந்துவரும் இங்கிலாந்து தற்போது ஆச்சரின் வருகையால் மேலும் பலத்தை சேர்த்துள்ளது.

இதையும் படிங்க : பும்ரா அவங்க எல்லாரையும் விட பெஸ்ட்.. சச்சினுக்கு கொடுக்கும் மரியாதை கொடுங்க.. அஸ்வின் கோரிக்கை

அதன் காரணமாக இந்திய அணிக்கு நிச்சயம் ஒரு அழுத்தம் இருக்கிறது என்றே கூறலாம். ஏனெனில் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசும் அவரை இந்திய வீரர்கள் இங்கிலாந்தில் எவ்வாறு சமாளிக்கப்போகிறார்கள்? என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான ஆர்ச்சர் 2021 வரை 13 போட்டியில் விளையாடி 42 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement