ஐபிஎல் கிடையாது.. டெஸ்ட் கிரிக்கெட்டை அழிப்பது உங்க ஐடியா தான்.. விமர்சித்த இங்கிலாந்து வீரர்

Mark Butcher
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் டி20 போட்டிகளின் வருகையால் நூற்றாண்டுக்கு முன்பாக துவங்கப்பட்ட டெஸ்ட் போட்டிகள் அழிந்து வருவதாக நிறைய விமர்சனங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தான் டெஸ்ட் போட்டிகள் அழிவதற்கு முக்கிய காரணமாக இருப்பதாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்த நிறைய முன்னாள் வீரர்கள் கடந்த காலங்களில் வெளிப்படையாகவே விமர்சித்துள்ளனர்.

அதற்கேற்றார் போல் 5 நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளை விட 3 மணி நேரத்தில் முடிவை தரக்கூடிய டி20 போட்டிகள் ரசிகர்களின் அபிமான கிரிக்கெட்டாக உருவெடுத்துள்ளது. இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக கடந்த 2019ஆம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருப்பதைப் போலவே டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என தனியாக சாம்பியன்ஷிப் எனும் உலக கோப்பையை ஐசிசி அறிமுகப்படுத்தியது.

- Advertisement -

அதனால் சமீப காலங்களில் டிராவுக்கு பதிலாக வெற்றி பெற வேண்டும் என்றால் எண்ணத்துடன் அனைத்து அணிகளும் விளையாடுவதால் டெஸ்ட் போட்டிகள் மீண்டும் மறுமலர்ச்சி காண துவங்கியுள்ளது என்றே சொல்லலாம். இந்நிலையில் ஐபிஎல் போன்ற டி20 போட்டிகளை விட ஐசிசி அறிமுகப்படுத்தியுள்ள சாம்பியன்ஷிப் தான் டெஸ்ட் கிரிக்கெட்டை கொஞ்சம் கொஞ்சமாக அழிப்பதாக முன்னாள் இங்கிலாந்து வீரர் மார்க் பட்சர் விமர்சித்துள்ளார்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்:
இது பற்றி விஸ்டனில் அவர் பேசியது பின்வருமாறு. “உங்களுடைய இருதரப்பு தொடர்கள் ரசிகர்கள் மற்றும் களத்தில் விளையாடும் இருநாட்டு வீரர்களின் கற்பனையைப் பிடிக்க வேண்டும். பின்னர் பொதுமக்கள் கிரிக்கெட்டை அதிகமாக பார்க்க வேண்டும் என்பதே முக்கிய புள்ளியாகும். ஆனால் அதற்கு இருநாட்டு அணிகளும் கடுமையாக போட்டியிடுவது மட்டுமே ஒரே வழியாகும். அதற்காக எடுக்கப்பட்டுள்ள முயற்சி (டெஸ்ட் சாம்பியன்ஷிப்) தற்போது அதை மோசமாக்கி விட்டது என்று நினைக்கிறேன்”

- Advertisement -

“என்னை கேட்டால் இதை சரி செய்ய தொலைக்காட்சி உரிமம் போன்ற பல்வேறு அம்சங்களில் கிடைக்கும் பணத்தை அனைத்து நாட்டு வாரியங்களிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும். அந்த பணத்தை வைத்து அந்தந்த நாட்டு வாரியங்கள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் தங்களுடைய வீரர்களுக்கு உலக தரத்தில் சம்பளம் கொடுக்க வேண்டும். அதில் பணக்கார வாரியங்கள் தங்களுடைய வீரர்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். அதைப் பற்றி எனக்கு பிரச்சனை இல்லை”

இதையும் படிங்க: அப்படியே போய்டுங்க.. இந்தியாவை விமர்சித்த பாக் இயக்குனருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

“ஆனால் அதை செய்யா விட்டால் இது வெறும் சரணாகதி தான். இதுவரை மெதுவாக நகரும் கார் விபத்தாக இருந்த அது தற்போது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறினார். அதாவது டி20 கிரிக்கெட்டுக்கு நிகரான சம்பளத்தை டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அப்படி செய்தால் தான் பணத்துக்காக டி20 கிரிக்கெட்டில் முழுமூச்சுடன் போராடும் வீரர்கள் அதே அளவுக்கு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி தரத்தை உருவாக்குவார்கள் என்று மார்க் பட்சர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement